பாரத பிரதமரின் சிறுபான்மை சமுதாயத்திற்கான 15 அம்ச திட்டம் ஜூன் 2006 இல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு அம்சமே Pre - Matric உதவி
தொகை திட்டம். முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியருக்கு
இவ்வுதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2008 - 2009 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாசாரங்கள் அடிப்படையில் இவ்வுதவி தொகைகள் - ஒவ்வொரு மாநிலத்திலும் -
வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினை அமல்படுத்த ஆகும் செலவுகளில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீத மாநில அரசும் பங்கேற்கின்றன.
Pre - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மொத்த உதவி
தொகைகளில் 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கப்படுகின்றது. இவ்வுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு
வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் கூடுதலாக இரு மாணவர்கள் மற்றுமே இத்திட்டதின்க்கீழ் பயனடைய
முடியும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பித்தவர்களில் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் பள்ளிக்கூடங்கள் வாயிலாகவே அனுப்பப்படவேண்டும். புது விண்ணப்பங்கள் (Fresh Applications) அனுப்ப ஜூன் 30 கடைசிதினம் ஆகும். முன்னரே
உதவி பெற்ற மாணவர் நடப்பாண்டில் புதுப்பிக்க (Renewal) கடைசி தினம் ஜூன் 15.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
வழங்கப்படும் உதவி தொகை
வகுப்பு 1 ௦- 5 ...
-- பள்ளிக்கூட நுழைவு கட்டணம் (Admission)
--- தினம் வந்து செல்பவருக்கு - உதவி கிடையாது
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - உதவி கிடையாது
-- பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - உதவி கிடையாது
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - உதவி கிடையாது
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 100 (10 மாதங்கள்
வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - உதவி கிடையாது
வகுப்பு 6 ௦- 10 ...
-- பள்ளிக்கூட நுழைவு கட்டணம் (Admission)
--- தினம் வந்து செல்பவருக்கு - வருடத்திற்கு ரூபாய் 500
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - வருடத்திற்கு ரூபாய் 500
-- பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 350
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 350
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 100 (10 மாதங்கள்
வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 600 (10 மாதங்கள்
வரை)
பள்ளிக்கூட நுழைவு மற்றும் படிப்பு கட்டண உதவி தொகைகள் பள்ளிக்கூட வங்கிகணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். பராமரிப்பு உதவி தொகை
மாணவர் வங்கிகணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
|