மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 09.05.2011 அன்று துவங்கியது.
29.05.2011 அன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு மாநில காவல்துறை - சென்னை அணியை எதிர்த்து பெங்களூரு சாய் அணி களம் கண்டது. ஆட்டத்தின் இறுதியில் 5-0 என்ற கோல் சென்னை அணி வென்றது.
இப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக இருந்தது. பணி நிமிர்த்தம் அவர் வர இயலாமற்போனதையடுத்து மாவட்ட ஆட்சியரின் சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) எஸ்.சேதுராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
போட்டியின்போது பதிவு செய்யப்பட்ட பார்வையாளர் காட்சிகள் பின்வருமாறு:-
1. போட்டி ரசிக்கவில்லை posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[01 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4916
போட்டி ரசிக்கவில்லை - ஒரே அக்க போர் - முன்பு போல் மக்களிடம் சந்தோசம் இல்லை - போட்டி முடிந்து தலை வலி மாத்திரை வாங்க போனேன் - முடிவில் வான வேடிக்கை ரெம்ப நல்லா இருந்தது - அடுத்த வருடம் எப்டியோ? இன்ஷா அல்லாஹ் பார்போம்...
2. நீங்களே இப்படி சொன்னா எப்படி...? posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[01 June 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4922
போட்டா எல்லாம் பார்க்கும் போது நீங்க சொன்ன மாதிரி அப்படி எல்லாம் ஒன்னும் தெரியலயே.. மக்கள் எல்லாம் ரொம்ப சந்தோசமாலோ போஸ் கொடுக்கிறாங்கா. போட்டி நல்லா இல்லேனா நாங்க ஆன்லைன்ல டைம் செலவளித்து மேட்ச பார்ப்போமா.. அந்தன்னைக்கு எனக்கு கூடதான் கொஞ்சம் வயித்தவலி அதுக்கு காரணம் இந்த மேட்சுனு சொல்ல முடியுமா. உங்களுக்கே தெரியும் ஆல் இந்தியா நடத்துறது எவ்வளவு கஷ்டம்னு நீங்களே இப்படி சொன்னா எப்படி...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross