பாரத பிரதமரின் சிறுபான்மை சமுதாயத்திற்கான 15 அம்ச திட்டம் ஜூன் 2006 இல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு அம்சமே Merit-Cum-Means உதவி
தொகை திட்டம். முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியருக்கு
இவ்வுதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாசாரங்கள் அடிப்படையில் இவ்வுதவி தொகைகள் - ஒவ்வொரு மாநிலத்திலும் -
வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினை அமல்படுத்த ஆகும் செலவுகள் முழுவதையும் மத்திய அரசு பொறுப்பேற்கிறது.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. மொத்த உதவி
தொகைகளில் 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கப்படுகின்றது. தமிழகத்தில் இவ்வாண்டு 767 விண்ணப்பங்கள் ஏற்க்கப்படும். இதில் கிருஸ்துவர்களுக்கு 399 இடங்களும், முஸ்லிம்களுக்கு 366 இடங்களும், சீக்கியர்களுக்கு 1 இடமும், பௌத்தமததினருக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Post - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படாத எம்.பி.பி.எஸ், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கு
Merit-Cum-Means திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை அறிய இங்கு அழுத்தவும்.
இவ்வுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு
வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பித்தவர்களில் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலமே பதிவு செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் புது விண்ணப்பங்களை செப்டம்பர் 10 க்குள் சமர்பிக்கவேண்டும். புதுப்பிக்கப்படும் விண்ணப்பங்களை டிசம்பர் 31 க்குள் சமர்பிக்கபட வேண்டும். பதிவுசெய்தபின் விண்ணப்பங்கள் நகல் எடுக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் மூலம்
புது விண்ணப்பங்கள் செப்டம்பர் 16, 2011 க்கு முன்னரும், புதுப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 5, 2012 க்கு முன்னரும் சமர்பிக்கபட வேண்டும்.
வழங்கப்படும் உதவி தொகை
-- கல்வி கட்டணம் (Tuition Fee)
--- வருடத்திற்கு 20,000 ரூபாய் வரை
--- ஐ.ஐ.டி போன்று குறிப்பிட்ட 70 கல்விநிறுவனங்களில் பயில்பவர்களின் முழு கல்விகட்டணமும் ஏற்றுக்கொள்ளப்படும்
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 500 (10 மாதங்கள் வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 1000 (10 மாதங்கள் வரை)
|