சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இவர் பிறந்த நூற்றாண்டு நிறைவினையொட்டி மத்திய அரசு 1989 ஆம் ஆண்டு - சிறுபான்மை சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு - மௌலானா ஆசாத் கல்வி அறநிறுவனம் (Moulana Azad Education Foundation) என்ற பெயரில் ஒரு தொண்டு அமைப்பை உருவாக்கியது. மத்திய சிறுபான்மை துறை அமைச்சரே இதன் தலைவராக செயல்படுவார்.
இந்நிறுவனம் மூலம் கடந்த பல ஆண்டுகளாக - Maulana Azad National Scholarship Scheme for Girls beloging to Minorities
என்ற பெயரில் சிறுபான்மை இனத்தை சார்ந்த மாணவியர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தப்பின் விண்ணப்பிக்க வேண்டிய இத்திட்டம் - முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி
ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு 6000 ரூபாய் என இரு ஆண்டுகள் (11 மற்றும் 12 வகுப்புகளில்) 12,000 ரூபாய் உதவி தொகை வரை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்கள்
எடுத்திருக்கவேண்டும்.
முந்தைய ஆண்டில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கு கூடுதலாக இருக்கக்கூடாது. இது குறித்த முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவோர் வேறு திட்டங்களில் உதவி பெறுபவராக இருக்கக்கூடாது.
விண்ணப்பங்கள் நேரடியாக -
MAULANA AZAD EDUCATION FOUNDATION,
Social Justice Service Centre,
Chelmsford Road,
New Delhi - 110 055.
என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஆகஸ்ட் 31 க்குள் சமர்பிக்கப்படவேண்டும்.
விண்ணப்பங்களை www.maef.nic.in என்ற இணையத்தளத்தில் பெறலாம். அல்லது விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
தகவல்:
டாக்டர் டி. முஹம்மது கிஸார்,
சென்னை. |