தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலக செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகக் கட்சியை பிரதான எதிர்கட்சியாகவும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவரான திரு. விஜயகாந்த் அவர்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்கட்சித் தலைவரகாவும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: செய்தி, மக்கள் தொடர்புத் துறை,
தமிழக அரசு, சென்னை - 9.
1. மக்களுக்காக posted bymuhammed umar , Muhammed Irshath (Jeddah, Saudi Arabia)[01 June 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4911
மக்களுக்காக விஜயகாந்த் உழைக்க வேண்டும். குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர். செய்வாரா?
2. யாரும் இது வரை கண்டிராத மச்சம்.!!! posted byzubair (riyadh)[01 June 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4913
தே.மு.தி.க பிரதான எதிர்க்கட்சியாக அறிவிப்பும், எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்தை அங்கீகரித்து இருப்பதும் காலத்தின் சூழ்ச்சி...... நிரூபித்து இருக்கும்போது நாமும் ஏற்றுதானே ஆகணும். வாழ்த்துக்கள்.
இவர் ஏன் இந்த கருப்பா இருக்காரு என்று நினைத்தோம்... இப்பம் தான் நமக்கு தெரியுது அது கருப்பு இல்லை உடம்பு பூராவும் மச்சம் என்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross