இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08,09,10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ள பல்வேறு நூற்கள் பட்டியலில், காயல்பட்டினம் குறித்த தகவல்களடங்கிய சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பு மலருக்கு தகவல்கள் கோரி, மலர் வெளியீட்டுக்குழு தலைவர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
காயல்பட்டினத்தில் 2011ஜூலை 8.9.10.மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டையொட்டி காயல்பட்டினத்தின் வரலாறு, சிறப்புக்களை உள்ளடக்கிய ‘சிறப்பு மலர்’ வெளிவர உள்ளது.
உலகளாவிய அளவில் இம்மலர் செல்ல இருப்பதால், காயல்பட்டினத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே காயல்பட்டினம் தொடர்புடைய செய்திகள், சிறப்புக்கள், பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், ஆண் பெண் மதரஸாக்கள், கல்வி நிலையங்கள், பொது நல ஸ்தாபனங்கள், உள்ளூர் வெளியூர் வெளிநாடுவாழ் காயல் நல சங்கங்கள், அறக்கட்டளைகள், இணையதளங்கள், வாழ்ந்து மறைந்த பெரியார்கள், சமூக ஆர்வலர்கள், ஆலிம் பெருமக்கள், ஆன்மீகம், மருத்துவம், பொறியியல், கலை, கலாச்சாரம், ஊடகத்துறை உள்ளிட்டவைகளில் சாதனையாளர்கள் பற்றிய குறிப்புக்களை சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களோ எழுதி, புகைப்படமிருந்தால் அதனையும் இணைத்து அனுப்பித்தர வேண்டுகிறோம்.
A4 அளவில் கலரில் வெளிவரும் இம்மலருக்கான விளம்பர கட்டணம் கலர் முழுபக்கம் ரூ.10000/- அரைபக்கம் ரூ.6000/- கருப்பு வெள்ளை முழுபக்கம் ரூ.7000/- அரைபக்கம் ரூ.4000/ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் / விளம்பரங்கள் / புகைப்படங்கள் / தகவல்கள் அனைத்தும் 15.06.2011 தேதிக்குள் கீழ்காணும் முகவரியில் கிடைக்கச்செய்ய அன்புடன் வேண்டுகிறோம். குறித்த காலத்திற்குள் கிடைத்தால் மட்டுமே மலரில் இடம்பெறச் செய்ய வாய்ப்பிருக்கும் என்பதை மீண்டும் அறியத் தருகிறோம்... நன்றி!
தொடர்பு முகவரி:
தலைவர்,
‘காயல்பட்டினம் சிறப்பு மலர்’ வெளியீட்டு குழு
காயிதே மில்லத் மன்ஸில்
36,மரைக்காயர் லெப்பை தெரு
மண்ணடி, சென்னை-600001
செல்-9790740787
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |