பாரத பிரதமரின் சிறுபான்மை சமுதாயத்திற்கான 15 அம்ச திட்டம் ஜூன் 2006 இல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு அம்சமே Post - Matric உதவி
தொகை திட்டம். முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியருக்கு
இவ்வுதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாசாரங்கள் அடிப்படையில் இவ்வுதவி தொகைகள் - ஒவ்வொரு மாநிலத்திலும் -
வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினை அமல்படுத்த ஆகும் செலவுகள் முழுவதையும் மத்திய அரசு பொறுப்பேற்கிறது.
Post - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, வாழ்க்கைத் தொழிற்கல்வி (Vocational Courses), ஐ.டி.ஐ., ஐ.டி.சி., என்.சி.வி.டி., பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு போன்றவைகளுக்கு
உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இவ்வுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு
வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் கூடுதலாக இரு மாணவர்கள் மற்றுமே இத்திட்டதின்க்கீழ் பயனடைய
முடியும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பித்தவர்களில் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் பள்ளிக்கூடங்கள்/கல்விநிறுவனங்கள் வாயிலாகவே அனுப்பப்படவேண்டும்.
11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் புது விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 30 கடைசிதினம் ஆகும். முன்னரே இப்பிரிவை சார்ந்த புதுப்பிக்கும் மாணவர் விண்ணப்பங்கள் ஜூன் 15க்குள் சமர்பிக்கப்படவேண்டும்.
பிறபடிப்புகளுக்கான புது விண்ணப்பங்கள் அனுப்ப ஜூலை 15 கடைசிதினம் ஆகும். முன்னரே இப்பிரிவை சார்ந்த புதுப்பிக்கும் மாணவர் விண்ணப்பங்கள் ஜூன் 30க்குள் சமர்பிக்கப்படவேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
வழங்கப்படும் உதவி தொகை
வகுப்பு 11 ௦- 12 ...
-- பள்ளிக்கூட நுழைவு கட்டணம் (Admission) மற்றும் பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- வருடத்திற்கு 7,000 ரூபாய் வரை
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 140 (10 மாதங்கள் வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 235 (10 மாதங்கள் வரை)
வாழ்க்கைத் தொழிற்கல்வி (Vocational Courses), ஐ.டி.ஐ., ஐ.டி.சி., என்.சி.வி.டி., பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கு ...
-- நுழைவு கட்டணம் (Admission) மற்றும் பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- வருடத்திற்கு 10,000 ரூபாய் வரை
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 140 (10 மாதங்கள் வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 235 (10 மாதங்கள் வரை)
இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் போன்ற படிப்புகளுக்கு ...
-- நுழைவு கட்டணம் (Admission) மற்றும் பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- வருடத்திற்கு 3,000 ரூபாய் வரை
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 185 (10 மாதங்கள் வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 355 (10 மாதங்கள் வரை)
M.Phil, Phd போன்ற படிப்புகளுக்கு ...
-- நுழைவு கட்டணம் (Admission) மற்றும் பள்ளிக்கூட மாத கல்வி கட்டணம் (Tuition Fee)
--- உதவி கிடையாது
-- பராமரிப்பு உதவி தொகை மாதத்திற்கு (Maintenance Fee)
--- தினம் வந்து செல்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 330 (10 மாதங்கள் வரை)
--- விடுதியில் தங்கி படிப்பவருக்கு - மாதத்திற்கு ரூபாய் 510 (10 மாதங்கள் வரை)
நுழைவு மற்றும் படிப்பு கட்டண உதவி தொகைகள் கல்விநிறுவனங்களின் வங்கிகணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். பராமரிப்பு உதவி தொகை
மாணவர் வங்கிகணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
|