காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வர் ஆணையின் படி அஇஅதிமுக, வார்டு கிளை சார்பாக மோர்-தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு துணை செயலாளர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். 1ஆவது வார்டு செயலாளர் செந்தமிழ் செல்வன், வார்டு பொறுப்பாளர் சுல்தான் ஜமாலுதீன், 12ஆவது வார்டு செயலாளர் மங்கை சுயம்புலிங்கம், 4ஆவது வார்டு செயலாளர் ஜெயலானி, 6ஆவது வார்டு செயலாளர் புகாரி, 8ஆவது வார்டு செயலாளர் மெய்தீன், கட்டா உமர், கசாலி, முத்து, காசிலிங்கம், நிஜார், அலெக்ஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர பிரமுகர் ஹாஜி சின்னத்தம்பி அதிமுக கொடியேற்றி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் அந்தோணி, நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சாக்கல், மேலவை பிரதிநிதி ஆதிநாராயணன், சிவபெருமாள், இசக்கி ஐயப்பன், ராமசந்திரன், தேமுதிக.,நகர செயலாளர் சதக்கத்துல்லா, நகர மமக., செயலாளர் ஜாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர். புரட்சி சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை வார்டு பொறுப்பாளர் சுல்தான் ஜமாலுதீன் செய்திருந்தார்.
நன்றி:
தினமலர் (29.05.2011)
|