27.05.2011 அன்று வெளியான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினம் நகரிலிருந்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் தெரிவித்துள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடைபெற்று முடிந்துள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், இறைக்கிருபையால் நகர அளவில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் Thakwa நல மன்றத்தின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் நமதூர் மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கு முயற்சி எடுத்து வரும் இக்ராஃ கல்வி சங்கம் மற்றும் தி காயல் ஃபஸ்ட் டிரஸ்ட் அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |