நடைபெற்று முடிந்துள்ள பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதலிடம் பெற்றுள்ளோருக்கும், மாநில சாதனையாளர்களுக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் ரஷீத் ஜமான் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி. பிரிவில் நகரளவில் முதலிடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஆயிஷா ஷரஃபிய்யா,
இரண்டாமிடம் பெற்றுள்ள
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியரான சித்தி கதீஜா, சாமு சமீரா, எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் ஷஃபீக்குர்ரஹ்மான்,
மூன்றாமிடம் பெற்றுள்ள
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஸல்மா ஸியானா,
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் சுப்பையா என்ற கண்ணன்
ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் பிரிவில் நகரளவில் முதலிடம் பெற்றுள்ள
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி ராஜலட்சுமி,
இரண்டாமிடம் பெற்றுள்ள அதே பள்ளியின் மாணவி முஜாஹிதா,
மூன்றாமிடம் பெற்றுள்ள சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி ரிஸ்விய்யா ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழி பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ஆயிஷா முஸ்ஃபிரா,
மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி செய்யித் ஹலீமா
ஆகியோரையும் எம் மன்றம் மனதாரப் பாராட்டி மகிழ்கிறது. நகர மாணவ-மாணவியர் இன்னும் ஆர்வத்துடன் கற்று, ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்றிட வாழ்த்தி துஆ செய்கிறோம்.
அத்துடன், இவர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவ சமுதாயத்தை மாநில அளவில் சாதிக்க வழிவகுத்து வரும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் இக்ராஃவுடன் இணைந்து பல நற்பணிகளை வலிமையாக ஆற்றி வரும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் எம் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறோம். உங்கள் தொடர்முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |