தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் 21ஆயிரத்து 586 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 20ஆயிரத்து 233பேர் தேர்ச்சி பெற்றனர். 93.73சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாவட்டத்தில் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 13 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாக்கியஸ்ரீ 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
அவர் எடுத்த மதிப்பெண்கள் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 மொத்தம் 495. இதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியன ஆர்.பாக்யவதி, கோவில்பட்டி வில்லிச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பார்த்திபன் ஆகிய 2பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.
பாக்கியவதியின் மதிப்பெண்கள் விவபரம் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 96. மாணவர் பார்திபன் மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99.
சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எம்.மெரின் வசந்த ரூபா 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3வது இடத்தினை பிடித்துள்ளார். மதிப்பெண் விபரம் தமிழ் 96, ஆங்கிலம் 97, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99.
Administrator: ஆரம்ப தகவல்கள் படி காயல்பட்டின மாணவி மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது.
தகவல்:
www.tutyonline.net
|