வரும் ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை பதட்டமின்றி பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி 01.06.2011 முதல் தொடர்ந்து தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படவுள்ளது. நியாயவிலை அங்காடிகளில் பதியப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்குத் தேவையான நூறு சதவிகித அரிசி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அவர்களது குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும்.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித பதட்டமுமின்றி நியாயவிலை அங்காடிகளுக்குச் சென்று, அவர்களது குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு அரிசியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross