ஹாங்காங்கிலுள்ள ஹாங்காங் க்ரிக்கெட் அசோஸியேஷன் சார்பில் சேலன்ஞ் லீக் க்ரிக்கெட் போட்டிகள், ஹாங்காங் சான்டி பே மைதானத்தில் நடைபெற்றது. சுற்றுப்போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் காயல்பட்டினம் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் அசோஸியேஷன் - எம்.சி.சி. அணி எல்.எஸ்.டபிள்யு. சார்ஜன் அணியை எதிர்த்து விளையாடியது.
டாஸில் வென்ற எம்.சி.சி. அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 30 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் எம்.சி.சி. அணி 8 வீரர்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின்
ஹபீபுர்ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களும்,
இஸ்மாஈல் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களும்,
அர்ஷத் 19 ஓட்டங்களும்,
மொகுதூம் 16 ஓட்டங்களும்,
வாவு யாஸர் 13 ஓட்டங்களும்,
மழ்ஹர் 13 ஓட்டங்களும் பெற்றனர்.
அடுத்து ஆடிய எல்.எஸ்.டபிள்யு. அணி 26.2 ஓவரில் 184 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் இழந்தது. எம்.சி.சி. அணியின் ஷம்சுத்தீன் 3 வீரர்களையும், இஸ்மாஈல் 1 வீரரையும், ஹபீபுர்ரஹ்மான் 2 வீரர்களையும், எஸ்.ஏ.நூஹ் 2 வீரர்களையும், கம்ரான் 1 வீரரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
இதன் மூலம் மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
கவ்லூன், ஹாங்காங். |