காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC அமைப்பின் ஆய்வறிக்கைகள், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 23.05.2011 அன்று (நேற்று) காலை 10.00 மணிக்கு, சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், அதன் தலைவர் ரஷீத் ஜமான் ஆகியோரிணைந்து, சிங்கப்பூருக்கான இந்திய தூதரின் முதன்மைச் செயலாளர் வனஜா கே.தெக்கத் இடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டையும் பெற்றுக்கொண்டனர்.
ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட வனஜா கே.தெக்கத், அது தொடர்பான துறை அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பித்து, தகவல் தெரிவிப்பதாக அப்போது உறுதியளித்ததாக சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் ரஷீத் ஜமான் தெரிவித்துள்ளார். |