ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி தங்கும் விடுதி விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்க்கு உதவி செய்ய விரும்புவோர் மாத சந்தாவாக, வங்கிக்கணக்குக்கு நேரடியாக அனுப்பலாம் என கல்லூரியின் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அதிகமான மாணவிகள் தங்கும் விதமாக ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி விடுதி தற்போது விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளியூர்களில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகள் காயல்பட்டின பள்ளிக்கூடங்களில் படிக்க வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு வரும் மாணவிகள் விடுதியில் தங்கி பள்ளிக்கூட பாடங்களுடன், மார்க்க கல்வியையும் பெற தோதுவாக இவ்விடுதி இன்ஷா அல்லாஹ் அமையும்.
இத்திட்டங்கள் நிறைவேற உங்கள் துஆக்களும், பொருள் உதவிகளும் தேவைப்படுகிறது. இதற்க்கு உதவி செய்ய விரும்புவோர் மாத சந்தாவாக வங்கிக்கணக்குக்கு நேரடியாக அனுப்பலாம். இப்பணிகளுக்காக நீங்கள் செய்யும் எல்லா வித உதவியும் உங்களின் சேமிப்பாகும். மறுமையில், இன்ஷா அல்லாஹ், அதற்க்கான கூலி சுவனத்தில் உண்டு.
TAMILNADU ISLAMIC EDUCATION AND SOCIAL SERVICES TRUST என்ற பெயரில் காசோலைகளை எமது முகவரிக்கு நீங்கள் அனுப்பலாம்.
கணினி மூலம் (Online transfer) நன்கொடை அனுப்பும் போது அது குறித்த விபரங்களை (உங்கள் பெயர், முகவரி) எங்களுக்கு ஈமெயில் (asgic@kayalpatnam.com) மூலம் தெரிவிக்கவும்
Bank: CENTRAL BANK OF INDIA Branch: KAYALPATNAM IFSC Code: CBIN0280928 [For online / NEFT Transfer] Account Type: Current Account No: 2081180380 Name: TAMILNADU ISLAMIC EDUCATION AND SOCIAL SERVICES TRUST
இவ்வாறு கல்லூரி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: எம்.எம். செய்யத் இப்ராஹீம்,
சொளுக்கார் தெரு.
1. அன்பு நெஞ்சங்களே, அள்ளிக்கொடுங்க posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[23 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4674
இந்த நம் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தமிழகத்தில் ஒரு முன்மாதிரி கல்லூரியாகவும், முதன்மை கல்லூரியாகவும் திகழ்வதை அறிந்து நமக்கு பெருமை.
தமிழகத்தில் எந்த பயானாக இருந்தாலும், பெண்கள் கல்வியைப்பற்றி பேசினால் கண்டிப்பாக "ஆயிஷா சித்தீக்கா கல்லூரி" என்ற சொல் தவிர்க்கமுடியாத சொல் ஆக ஆகிவிட்டது. ஆனால் இந்த கல்லூரி உடைய வளர்ச்சி இன்னும் முழுமை அடையாததை அறிந்து வருத்தம் தான் வருகிறது.
அன்பு நெஞ்சங்களே, அள்ளிக்கொடுங்க. பெரிய தொகை முழுமையாக கொடுக்க முடியவில்லையே என்ற உங்களின் ஏக்கத்தை நிவர்த்தி செய்யத்தான் இந்த சலுகை. சந்தோசமா..
நல்ல நிறைவாக கொடுங்க..வல்ல ரஹ்மான் உங்களுக்கு அவனின் அருள்மழையை பொழிவான். வல்ல அல்லாஹ் எவ்வளவு பெரிய அருட்கொடையாளன் என்பது தெரியும் தானே.
2. முன்மாதிரி மாணவி posted byM.M. Seyed Ibrahim (Chennai)[23 May 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4676
இந்த மதரசாவின் முன்னாள் தீனிய்யாத் மாணவி ஒருவர் தற்போது ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். ஏற்கனவே 500 ரூபாய் அனுப்பிவிட்டு, இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் அனுப்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross