புதிதாக பதவியேற்றுள்ள அ.தி.மு.க. அமைச்சரவையில் சுற்றுப்புற சூழல், மாசு கட்டுப்பாடு மற்றும் வக்ப் உட்பட சிறுபான்மை துறை அமைச்சராக இடம்பெற்ற என். மரியம் பிச்சை இன்று சாலை விபத்து ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 60.
திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தபோது பாடாலூர் அருகே லாரி ஒன்றில் அமைச்சர் பயணம் செய்த கார் மோதியதால், அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.
இவர் பயணித்த காரைப் பின்தொடர்ந்து வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி வந்துகொண்டிருந்தார். அவரது காரும் விபத்துக்கு உள்ளானது. தகவல் அறிந்து அவரிடம் தொடர்பு கொண்ட தினமணி நிருபரிடம், அமைச்சர் சிவபதி தான் நலமாக இருப்பதாகவும், தனக்கு காயம் எதுவும் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் நடைபெறும் சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். ஏப்ரல் 27 அன்று தனது 60 வயதை பூர்த்தி செய்த மரியம் பிச்சை பி.ஏ. பட்டதாரி ஆவார். திருச்சி மாநகராட்சியில் ஆரியமங்கலம் பகுதி வார்டு 27 உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கவுன்சில்லர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் அ.தி.மு.காவின் நகர்புற மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவை திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதியில் 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் மரியம் பிச்சை தோற்கடித்திருந்தார்.
3. Allaah might have planned to give the chance to a good muslim posted byHusain Noorudeen (Abu Dhabi)[23 May 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4648
தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார். திருச்சியில் இன்று காலை முத்துரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்னை திரும்பினார். திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார்.
பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திருச்சி சங்கிலியாண்டவுரத்தைச் சேர்ந்தவர். திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
5. அல்லாஹ் நன்மையை நாடி இருப்பானாக... posted byM.S. ABDULAZEEZ (Guangzhou)[23 May 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 4650
( இனாலிலாஹி.....) யா அல்லாஹ் அன்னாரின் பிழை பொருத்து அன்னாருக்கு சுவனபதி தந்தருள்வாயாக ஆமீன்.மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு என் சலாதினை தெரிவித்து கோள்கிறேன்.
இஸ்லாத்துக்கும் இவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள 'மரியம் ஓயன்ஸ்' - சாராயக்கடை அதிபர்.
இவரிடம் அனைத்து பள்ளிவாசலையும் நிர்வாகிக்கும் வக்ப் பொறுப்பு. அனைத்து நன்மக்களும் அவருக்கு கீழ். யாஅல்லாஹ் உன்னுடைய சோதனையில் இதுவும் ஒன்றா. அவருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடுத்து நல்வழிப்படுத்துவாயாக. நம்மால் முடிந்தது இது மாதிரி நல்ல துஆக்கள் கேட்பதுதான்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல இறைவன் இவர்களின் பாவங்களை மன்னித்து,இவரின் மண்ணறையை சுவனபூங்காவனமாக ஆக்கி அருள்வானாக! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும்,நல்ல பொறுமையையும்,நற்கூலியையும் கொடுப்பானாக ! அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரியப் படுத்துகிறேன்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இவரின் குடும்பத்தாருக்கு உதவிகளும்,நஷ்ட ஈடுகள் வழங்கி ,அவரின் இடத்திற்கு "வேறு ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி வழங்கி முஸ்லிம் சமுதாயம் நன்மை பெற ஆவன செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி!
11. பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது posted byமுத்து இஸ்மாயில் - STAR TEXTILES (kayalpatnam )[23 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4657
நேற்று அமைச்சர் மரியம் பிச்சை மற்றும் சிவபதி இருவரும் பேசுவதை செய்தியில் பார்த்தேன். இன்று சற்றும் எதிர்பார்க்காத இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது.குறிப்பாக பாடாலூர் காவல் நிலையம் அருகே வேக கட்டு பாடு இல்லை என்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.மறைந்த அமைச்சர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
12. மரியம் பிச்சை ACCIDENT posted byAbdur Rahim (Perambalur)[23 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4659
I was just on my way to Perambalur from Trichy today morning and by the time the Minister's car was just crossing my bus with siren. All in a sudden, when we reached Padalur, which is around 20 kms away from Perambalur, there were huge crowd gathering in the highways and I found there was an accident near the spot; as Muthu Ismail noted, that particular place is very well known for accidents and it is quite normal for us to come accross these incidents quite often. Hence, I thought that it was some accident and after I reached Perambalur only, I came to know that it was the minister's car. It all happened in seconds.... Is there any one to challenge Allah's wish...?
13. ஹய்ரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தாலா..... posted bys.s.md meera sahib (riyadh)[23 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4660
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல கருணையாளன் அவர்களின் பிழைகளை பொருத்து சுவன பதியை கொடுப்பானாக. எல்லா முஸ்லிம்களின் துவாகளையும் பெற்றுக்கொண்டே இருக்கிறார். உள்ளத்தை அறிபவன் அல்லாஹ் மட்டுமே.....
15. அவருக்கு நல்ல ஹிதாயத் ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[23 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4665
அவரை குறை கூறி எழுத வில்லை, சென்ற மாத பதிவை தான் குறிப்பிட்டு உள்ளேன். அதில் அவருக்காக இறைவனிடம் துஆ தான் கேட்டு உள்ளேன், அவருக்கு நல்ல ஹிதாயத் கொடுக்கச்சொல்லி.
வல்ல இறைவன் அவரின் பாவத்தை மன்னித்து, சுவர்க்கத்தை தரட்டும்.
16. WA ASAA AN THAKRAHOO..... posted byShameemul Islam SKS (Chennai)[23 May 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 4670
INNAA LILLAAH...........................
WA ASAA AN THAKRAHOO SHAI'AN WAHUWA KHAIRUN LAKUM WA ASAA AN THUHIBBOO SHAI'AN WAHUWA SHARRUN LAKUM, WALLAAHU YA'LAMU WA ANTHUM LAA THA'LAMOON.
17. Wheresoever you may be, death will posted byAbu Ahmadh Sona (Riyadh - KSA)[23 May 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4671
[4:78] "Wheresoever you may be, death will overtake you even if you are in fortresses built up strong and high!" And if some good reaches them, they say, "This is from Allah," but if some evil befalls them, they say, "This is from you (O Muhammad SAW)." Say: "All things are from Allah," so what is wrong with these people that they fail to understand any word?
TAFSIR IBN ABBAS
(Wheresoever ye may be) O sincere believers, on land or on the sea, in settlement or travelling, (death will overtake you, even though ye were in lofty towers) in fortified towers. Allah then mentioned the saying of the Jews and hypocrites: “since Muhammad and his Companions came to us, our harvests and fields have kept ever decreasing”, saying: (Yet if a happy thing) land fertility, lower prices and continuous rain throughout the year (befalleth them) the Jews and hypocrites (they say: This is from Allah) for He knew that we were good; (and if an evil thing) drought, dearth, hardship and high prices (befalleth them they say: This is of your doing) this is because of the ill-omen of Muhammad and his Companions. (Say (unto them)) unto the Jews and hypocrites, O Muhammad: (All) hardship and blessing (is from Allah. What is amiss with these people) the Jews and hypocrites (that they come not nigh to understand a happening?) that both hardship and bounty are from Allah.
18. வருந்துகிறோம்! posted bykavimagan kader and friends (dubai)[23 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4672
மிகவும் சோகமான நிகழ்வு! அன்னாரின் பிழை பொறுக்க
வல்லோனை வேண்டிடுவோம். அவரது பிரிவால் கலங்கி
நிற்கும் குடும்பத்தினருக்கும்,இயக்கத்தோழர்களுக்கும்
எமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross