உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் இன்வெர்ட்டர் கருவி பொருத்துவதற்காக, ரியாத் காயல் நல மன்றம் மற்றும் ஹாஜி லேண்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோரினைந்து அனுசரணையளித்துள்ளனர்.
மின் பற்றாக்குறை காரணமாக தமிழகமெங்கும் தினமும் பல மணி நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
தற்சமயம் இக்ராஃ அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், உயர்கல்விக்கு வழிகாட்டல், சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை-2011 உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக இடைவெளியின்றி பணியாற்றப்பட்டு வரும் இக்கால கட்டத்தில், தினமும் மூன்று மணி நேரமும், அதற்கு மேலாகவும் அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வருவதால், வெளிக்காற்றோ, வெளிச்சமோ இல்லாத இக்ராஃ அலுவலத்தில் பணிகள் பல மணி நேரங்களுக்கு தடைபடும் சூழல் இருந்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ், ஆலோசனைக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.டி.அபூபக்கர், காயல்பட்டினத்தைச் சார்ந்த பிரமுகர் ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோரிணைந்து, பாட்டரி மூலம் சேமிக்கப்பட்ட மின்சக்தியை மின்தடை நேரங்களில் தரும் இன்வெர்ட்டர் கருவி பொருத்தும் வகைக்காக ரூ.21,000 (இருபத்தோராயிரம் ரூபாய்) தொகையை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதிடம் இன்று நண்பகல் 01.00 மணிக்கு வழங்கினர்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஹுமாயூன், அமீரக காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.மீராஸாஹிப், அதன் உறுப்பினர் ஜக்கீன், இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். |