Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:24:06 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6264
#KOTW6264
Increase Font Size Decrease Font Size
சனி, மே 21, 2011
மே 28இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம்! புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4405 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்ராஃ சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், நடப்பாண்டிற்கான புதிய தலைவராக தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ளார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 28.05.2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸின் சிறிய அரங்கில் நடைபெறவுள்ளது.



கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ள அம்சங்கள்:
சுழற்சிமுறை நிர்வாகத்தின்கீழ் இக்ராஃவின் அடுத்த தலைவராக, தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தல்...

இக்ராஃ சுழற்சிமுறை நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் சிங்கை கா.ந.மன்றத்தின் புதிய தலைவராக ஜனாப் ரஷீத் ஜமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவரை இக்ராஃவின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுத்தல்...

நிர்வாக வசதிகளைக் கருத்தில்கொண்டு பதவி விலகிய செயலாளருக்குப் பகரமாக புதிய செயலாளரைத் தேர்ந்தெடுத்தல்...

நடப்பு பொருளாளர் தான் சென்னையில் வசிப்பதால் செயல்பட இயலாநிலையைத் தெரிவித்ததன் அடிப்படையில் அப்பொறுப்புக்கு புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்தல்...

குறைந்துள்ள அளவுக்குத் தேவையான செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்...

கல்வித்துறை போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் இக்ராஃவை உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்து கலந்தாலோசித்தல்...

இக்ராஃவின் நிர்வாகச் செலவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து கலந்தாலோசித்தல்...

உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இக்ராஃ நடப்பு தலைவரின் அசைபடச் செய்தி:
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின்கீழ் இதுவரை தலைவராக இருந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரும் நடப்பு ஆலோகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் அசைபடம் வாயிலாகத் தெரிவித்துள்ள செய்தியும் இக்கூட்டத்தின்போது உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது.

கூட்டம் குறித்து இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் முறைப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வெளியூர்-வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பழைப்பு:
குறிப்பாக, வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து தாயகம் வந்துள்ள இக்ராஃவின் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, இக்ராஃ நிர்வாகக் குழுவினர் சார்பில் இச்செய்தியின் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயம் கல்வியில் உயர்நிலையை எட்டுவதற்காக உலக காயல் நல மன்றங்களின் வழிகாட்டுதலில் இக்ராஃ மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு உறுதுறை புரியும் வகையில், இதுவரை இக்ராஃவில் உறுப்பினராகாதவர்கள், ஆண்டுச்சந்தா ரூபாய் முன்னூறு மட்டும் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தந்து, உறுப்பினராகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. congr
posted by syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [21 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4584

He is eligible person for this post.I always wish him for his success.

Best regards
Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இனி கலக்கல் தான் போங்க.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [21 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4586

எங்களின் தம்மாம் மன்றத்தின் தலைவரும், எங்களின் காட்பாதர் டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இனி கலக்கல் தான் போங்க.

அவர்களின் சீரிய பணிக்கு வல்ல ரஹ்மான் துணை இருப்பான் கூடவே நாமளும் வழமை போல அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கணும். இன்ஷாஹ் அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்
posted by முத்து இஸ்மாயில் - STAR TEXTILES (kayalpatnam ) [21 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4587

டாக்டர் இத்ரீஸ் அவர்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள் - அன்புடன் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காட்பாதர் என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.
posted by hasan (Khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4589

சகோதரர் ஜியாவின் காட்பாதர் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். இஸ்லாத்திற்கு புறம்பான வார்த்தைகளை எழுதுவதையும் அதை பிரசுரிப்படையும் நிறுத்த வேண்டும்.

Administrator: The word Godfather has many meanings. One such meaning (from Webster dictionary) is one that founds, supports, or inspires. We believe Bro.Jiyaudeen used that word with that meaning in mind. Hence the comment was approved


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காட்பாதர் என்பது கிருத்துவசொல்
posted by Hasan (Khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4590

காட்பாதர் என்பது கிருத்துவசொல் என்பதை ஆங்கிலம் படித்த அனைவரும் அறிவர். அதன் அர்த்தத்தை கீழ் காணவும்.

1. (noun) godfather
any man who serves as a sponsor for a child at baptism

2. (noun) godfather
someone having a relation analogous to that of a male sponsor to his godchild


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. webster says - முழுவதுமாக எழுதவும்
posted by Hasan (Khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4591

god-father -

1) a man who sponsors a person at baptism

2) one who is relation to someone or something analagous to that of male sponsor to his godchild. a) as a one that founds, supports, inspires ( made him the ~ of whole generation of rebels)
b) leader of an organized crime syndicate.

ஏனுங்கே அர்த்தம் எல்லாம் பார்க்கணும் . god க்கு father ஒ child ஒ இல்லைங்கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அது சரி... நிர்வாகச் செலவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது
posted by hasan (khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4593

இக்ராஃவின் நிர்வாகச் செலவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து கலந்தாலோசித்தல்...

அதை முதலில் கலந்தாலோசித்தல் வேண்டும்...

நம்ம டாக்டர் அவர்கள் இதை கவனிப்பார் என்று நம்புவோம். இதை பற்றி அனைவரும் கருத்துரை பண்ணுங்க..
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் உதவுங்க..

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. காட்பாதர் ??? ( சிர்க்)
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [21 May 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 4594

காட் பாதர் ??? என்ற வார்த்தை இஸ்லாத்திற்கு புறம்பான ஒன்று முற்றிலும் தவறு. கண்டிப்பாக நீக்கப்படகூடிய சொல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காட்பாதர் என்றால்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [21 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4596

அன்பு சகோ.ஹசன் அவர்களுக்கு, தங்களின் கருத்துக்கு நன்றி. இது மாதிரி நபர்கள் இருப்பதுதான் நன்று, குறைகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு.

எந்த வார்தையையும் நேரடியாக அர்த்தம் பார்த்தால் அவ்வளவுதான்.

காட்பாதர் என்றால் "தத்தெடுத்த பெற்றோர்" என்று அர்த்தம்.

எங்களை மாதிரி குடும்பத்தை விட்டு வாழ்பவர்களுக்கு இவர்தான்(டாக்டர் இத்ரீஸ்) தத்தெடுத்த பெற்றோர்.

சின்ன தலைவலி என்று தெரிந்தவுடன், இரவு 2 மணி ஆனாலும் அடித்துப் பிடித்து நம்மிடம் ஓடி வருகிறாரே...?

யார் ஊர் சென்றாலும் முடிந்தவரை ஏர்போர்ட் வரை வந்து உதவி பண்ணுகிறாரே...?

அவசர தேவைக்கு பணம் தேவை என்றால் கொடுத்து உதவி நாம் எப்போது கொடுக்கிறோமோ அப்போதுதானே வாங்குகிறார்..
(கொடுக்காமல் விட்டாலும் கேட்க மாட்டார்)...

இன்னும் எழுதலாம்...

ஆகவே நான் காட்பாதர் என்று குறிப்பிட்டது சரிதானே.

காட்-இறைவன், பாதர்-தந்தை - இந்த அர்த்தத்தில் எழுதும் அளவிற்கு நான் ........ இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கிருத்துவ சொல்லை நீக்குங்கள் என்றால் ..அதை சரி காண...
posted by hasan (khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4600

கிருத்துவ சொல்லை நீக்குங்கள் என்றால் ..அதை சரி காண...மக்களுக்கு சரிதானே என்றும் தோன்றும் அளவுக்கு பதில் பேசுகிறீர்கள் ...கிருத்துவர்களுக்கும் யூதர்களுக்கும் மாறு செய்யுங்கள் அவர்களை போல் நீங்கள் செய்யாதீர்கள் என நம் மாநபி சல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறி உள்ளார்கள். So Please don't argue, remove that word.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உபயோகமில்லாத சொல்லை தவிர்த்திட வேண்டும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [21 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4601

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் காட்பாதர் என்று எழுதி இருப்பதை நேரிடையான அர்த்தத்தை அதாவது புழக்கத்தில் அதிகமாக உபயோகிக்கும் " ஞானத்தந்தை " என்ற அர்த்தம் கொள்ளவேண்டாம்.

காட்பாதர் என்ற ஆங்கில சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு :

BENEFACTOR : உதவி அல்லது நன்மை செய்பவர் ;

PATRON : பணி அல்லது மனிதருக்குப் பாதுகாப்பு அளிப்பவர் அல்லது ஆதரிப்பவர் என்றும் பொருள்.

இப்படியாக மேலும் பல அர்த்தங்கள் உண்டு என்பதால் சகோதரர் ஜியாவுதீன் காட்பாதர் என்று எழுதி இருக்கிறார்.

என்னதான் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் நடை முறையில் என்ன அர்த்தத்திற்காக அந்த சொல்லை உபயோகப்படுத்துகிறோமோ அது நம் மார்க்கத்திற்கு முரண்படுமெனில் நிச்சயமாக அதை உபயோகப்படுத்தக்கூடாது தவிர்த்துவிட வேண்டும்.

------------------------------------------------------------------------

டாக்டர் இத்ரீஸ் அவர்கள் நல்ல திறமையும் , எல்லாத்தரப்பு மக்களுடனும் பழகக்கூடியவராகவும் இருப்பதால் நடப்பாண்டிற்கான புதிய தலைவராக பொறுப்பேற்று , மேலும் பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு நல்ல பலன்களை மக்கள் பெற உதவிட வேண்டி வாழ்த்துகிறோம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தத்தெடுத்த பெற்றோர்" - எதுக்குங்கே
posted by Hasan (khobar) [21 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4603

சகோ.ஜியா kakkaa அவர்களே , "தத்தெடுத்த பெற்றோர்" - எதுக்குங்கே ... baptism க்கு.

kayalpatnam.com மும் ஜியா காக்காவும் முழு அர்த்தத்தை எழுதவும்.

1) a man who sponsors a person at baptism

2) one who is relation to someone or something analagous to that of male sponsor to his godchild. a) as a one that founds, supports, inspires ( made him the ~ of whole generation of rebels)

b) leader of an organized crime syndicate.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. guardian
posted by Mohamed (kayalpatnam) [21 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4604

தங்களுடைய வேண்டுகோள் ஏற்று God Father என்பதற்கு Guard Father (Guardian) என்று எடுத்துகொள்ளலாம் .எங்களுக்கு( DUbai) எல்லாம் இந்த தலைவர்போலே இல்லை என்ற மனம் வருத்தம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வாழ்த்துக்கள்!
posted by kavimagan (dubai) [21 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4606

காயல் மாநகரின்,கண்ணெனத் திகழ்கின்ற இக்ரா மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பேற்க இருக்கின்ற,சமூக ஆர்வலர்,மரியாதைக்குரிய டாக்டர் அவர்களை மனமுவந்து வாழ்த்தும் இந்த நல்ல நேரத்தில்,ஓராண்டுகாலத்தில் ஒப்பற்ற பலபணிகளைச் செய்து,இக்ராவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றி இருக்கும் ஹாஜி.பாளையம் ஹசன் சார் அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக!

அடுத்ததாக நம்ம ஜியாவுதீன் காக்கா விஷயம்! எந்த வார்த்தையை,எந்த அர்த்தத்தில் நாம் உபயோகிக்கிறோமோ, அதை அந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.GOD என்ற வார்த்தையும் கிருத்துவம் அறிமுகப்படுத்தியதுதான். அதற்கு GODDES என்ற பெண்பாலும், GODS என்ற பன்மையும் உண்டு.அதனை நாம் இறைவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும்போது அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அவர் சொல்லவந்த கருத்தை விடுத்து, அவர் நினைத்து பார்க்காத ஒரு கோணத்தில் பெரிதுபடுத்தும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை என்பதே எனது பணிவான அபிப்ராயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. அட போங்கப்பா
posted by Ibrahim (Salem) [21 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4607

டஹ்ரன் மக்களுக்குள் பிணக்கு வேண்டாம். நபிகள் நாயகம் (ஸல்) பயந்த ஒரு செயல் அவருடைய இறப்புக்கு பின்னால்.

எனக்கும் சேர்த்துதான் சொல்லுகிறேன்...

Innama A'malu bi Niyat.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னமல் அஃமாலு பின்னிய்யத்
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [21 May 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4610

'இன்னமல் அஃமாலு பின்னிய்யத்'| என்பது நபிமொழி.(புகாரி). எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். ...

ஒருவர் எந்த எண்ணத்தில் ஒரு கருத்தை எழுதிகிறார் என்பதை கருத்தில் கொள்ளாமல்.இப்படி தேவையில்லாத கருத்துயுத்தம் நடத்தியதில் இது இக்ராஃ பற்றிய செய்தியா..? இல்லை காட் பாதர் பற்றிய செய்தியா என்று குழம்பிவிட்டது.

எண்ணங்களின் உள்ளவற்றை அறியும் சக்தி எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. xxx
posted by syedahmed (gungzhou, china) [21 May 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 4611

காட் பாதர் என்ற சொல் முற்றிலும் தவறானது. நம் சமுதாயத்திற்கு உகந்தது அல்ல. கருத்து கொடுக்கும்பொழுது சிந்தித்து, சரியான அர்த்தம் புரிந்து எழுதினால் அதுதான் புத்திசாலித்தனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வாழ்த்துக்கள்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [21 May 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4612

இகராவின் புதிய தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கு என்னுடைய மனமார வாழ்த்துக்கள். உங்கள் சேவை நம் காயல் மக்களுக்கு தேவை. தொடருட்டும் உங்கள் சேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்.) [21 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4614

அன்பு சகோ. ஹசன் அவர்களின் கருத்துக்கும், தவறு நடந்து விடக்கூடாது என்ற அக்கறைக்கும் பாராட்டுக்கள்.சரி விசயதிற்கு வருவோம்.

காட்பாதர் என்ற வார்த்தைக்கு தங்கள் கூறிய அர்த்தமும் உண்டு, தத்தெடுத்த பெற்றோர், உதவி அல்லது நன்மை செய்பவர், பாதுகாவலர் என்ற அர்த்தங்களும் உண்டு. ஒவ்வொரு வார்தையும் எந்த இடத்தில பயன்படுத்தப் படுகிறதோ அந்த அர்த்தம் தான் தரும்.

டாக்டர் இத்ரீஸ் அவர்கள் எங்களுக்கு காட்பாதர் என்றால், இங்கு அவர் தத்தெடுத்த பெற்றோர், உதவி அல்லது நன்மை செய்பவர், பாதுகாவலர் என்ற அர்த்தம் தான் குறிக்கும்.

தங்கள் குறிப்பிடுவது போல " கிருஸ்துவ தேவாலயங்களில் குழந்தைகளுக்கு புனிதநீர் தெளித்து கிறிஸ்தவராக மாற்றும்" வேலையை டாக்டர் செய்துகொண்டு இருந்தால், நூறு சதவீதம் நான் குறிப்பிட்ட வார்த்தை தவறு தான்.

ஒரு சின்ன உதாரணம், ஒரு பொறியாளர் பெரிய இரும்பு கம்பிகளை கிரேன் ( CRANE ) கொண்டு தூக்கினார். இது சரி தானே. கிரேன் ( CRANE ) க்கு இன்னும் ஒரு அர்த்தமும் உண்டு, அதாவது கொக்கு என்ற பறவை. இப்போ தங்கள் சொல்லலாம் "எப்படி கொக்கைக்கொண்டு பெரிய இரும்புக்கம்பிகளை தூக்கினார்" என்று. இந்த இடத்தில இதற்க்கு என்ன அர்த்தம்,.

சரி, இந்த காட்பாதர் வார்த்தை கிருத்துவசொல் ஆகவே நீக்கணும் என்றால், ஆங்கில மொழியே கிருத்துவ மொழி தான். நீக்கி விடலாமா - ஆங்கில மொழியை.

தாங்கள் அணிந்து இருக்கும் கண்ணாடி, சட்டை, ஜீன்ஸ்,கடிகாரம், சூ அனைத்தும் யார் கண்டுப்பிடித்து, கிருத்துவர்களுக்கும் யூதர்களுக்கும் தானே. 97% கண்டு பிடிப்புகள் அவர்களுடையது தான், மாறு செய்யுங்கள் பார்ப்போம்.

ரசூல்(ஸல்) அவர்கள் சொன்ன விசயங்களை நன்கு புரிந்து பதியனும். நபிகள்(ஸல்) "கிருத்துவர்களுக்கும் யூதர்களுக்கும் மாறு செய்யுங்கள் அவர்களை போல் நீங்கள் செய்யாதீர்கள்" என்று சொன்னது வணக்க விசயத்திலும், மார்க்க விசயத்திலும் தான்.

நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் வியாபார தொடர்பு வைக்கவில்லையா? ஏன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் போர் கவச உடையை ஒரு யூதனிடம் அடமானம் வைத்து கடன் வாங்க வில்லையா. சொல்லுங்கள்...

நான் தவறு செய்து இருந்தால், உடனே மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். ஒரு சொல் கிருத்துவ சொல்,உபயோகிக்க கூடாது,அந்த அர்த்தம்,இந்த அர்த்தம் என்று வீன் தர்க்கம் பண்ணுவது நல்லது அல்ல.

இன்னும் விளக்கம் வேண்டும் என்றால் சொல்லுங்கள், டைப்பண்ணி வைத்து உள்ளேன், காப்பி-பேஸ்ட் பண்ணிவிட வேண்டியது தான். அதற்கும் மேலாக இன்னும் ஒரு சகோதரர், சிர்க் என்ற லெவலுக்கு சென்று விட்டார். சும்மா ஜல்லி கொத்துகிற வெலையை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக எழுதுங்கப்பா.

எனக்கு தெரிந்த அளவு விபரம் எழுதிஉள்ளேன். தவறு இருந்தால் சுற்றிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. விமர்சன வடிவில் வெறுப்பு
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [21 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4615

Dear Bro. சாளை S.I.ஜியாவுதீன்,

The wife of a former US President said "When you get your head above the crowd, you will be criticised". So, get used to criticism. Your use of the term "GodFather" is not the problem here.

For those who thought GodFather means Father of God, or Fatherly God or something associated only with Christians, then some amount of Italian Mafia History may help

During the 1950s or 60s, in the Cities where the mafia were active, each boy had two fathers: A biological father & a GodFather. This GodFather is not someone who baptised him. Because of the crimes, a boy needed two fathers to protect him.

The suggestion / idea to avoid a term just because it is associated with a Christian activity doesn't make any sense. If you don't understand a word, learn it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. சகோதரர் ஜியாவுத்தீன் ஏன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்?
posted by S.M. Hassan Moulana (Kuwait) [21 May 2011]
IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 4617

சகோதரர் ஜியாவுத்தீன் ஏன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்?. வாதத்திறமையால் அவர் செய்த தவறை சரிஆக்கிவிடமுடியது. ஒரு சொல் சர்ச்சைக்குரிய சொல்லாக இருக்குமானால் வேறு சொல்லை பயன்படுத்தலாமே. Leader or Role Model என்று சொல்லலாமே. அதை விட்டுவிட்டு ஏன் விதண்டாவாதம் செய்கின்றார்?. தவறு செய்வது மனித இயல்பு. அதை பெருந்த்தன்மையோடு ஒப்புக்கொண்டு தன்னை திருத்திக்கொள்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகு. அதை சகோதரர் ஜியாவுத்தீன் செய்வாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. OUR HEARTY CONGRATULATION
posted by Shameemul Islam SKS (Chennai) [21 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4618

OUR HEARTY CONGRATULATIONS TO THE INCOMING CHIEF (OF IQRA) AND MANY THANKS TO THE OUTGOING CHIEF. MAY ALLAH STRENGTHEN YOUR FEET TO FULFIL ALL THE TASKS OF IQRA AND ACCEPT EACH ONE OF YOUR EFFORTS. JAZAAKUMULLAAHU KHAIRAN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Non-issue
posted by Administrator (Chennai) [21 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4619

Bro.Hasan, regarding the usage of the word Godfather and your protest, I find it odd and unnecessary. A word in any language may have multiple meanings. I believe you are confusing the christian concept of God the Father with Godfather. They are different.

I am not going to lecture you on etymology of words, but language is such a thing - that you have to understand from the context it is used. Father could mean your male parent, but christians also use it to refer to their priests. Are we going to ban the use of the word father - because there is a christian usage for it? The word Lord is used for God, but it is also used as an English title for individuals (Lord Swaraj Paul etc). There are many such words in English which have a christian origin and are used in normal life.

In the current case, any normal person will understand Bro.Jiyaudeen has used the word to refer to a person who is very helpful/mentor (not to a person who presides over a baptism ceremony, not to a person who is the head of a mafia gang - the word's other meanings). Even in the Christian usage, the word Godfather doesn't mean God's father, It only refers to a person who takes moral responsibility for the good upbringing of the baby being baptised.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. நிறை குடமும் குறை குடமும்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [22 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4620

மச்சான் ஜியாவுத்தீன்,

நிறை குடம் தளும்பாது, குறை குடம்தான் எப்பவுமே தளும்பிக்கிட்டு இருக்கும், தான் இருக்குறத காட்டுறதுக்கு, நீ கவலைப்படாதே மச்சான், நீ நல்ல வேலைதான் செஞ்சுக்கிட்டு இருக்குற, Keep on rocking.............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Congrats
posted by Javed Nazeem (Chennai) [22 May 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 4621

Congratulations to Dr. Ithrees and Rasheed. We shall scale greater heights in the years to come. I think one year is too short to plan and implement proper measures – may be we shall debate on this :)

-----------------------------

I think every body here understands the context in which Bro. Ziyaudeen used that. Some might have thought of the word to be awkward, and hence they raised it. I do not read any other intention from those who object to it. The tone of the last disapproving message could have been much better - sounded like it was meant to corner him. Else all's well.

Bro. Ziyaudeen certainly does a wonderful service in keeping these news items interesting. That needs a certain amount of enthusiasm. Count me in to be one among his fans expecting his comments :). Some of whom, who had objected may fall in this group too.

I would still suggest that ambiguous words shall be avoided. Else it leads to a debate, hijacking the real message. On the other hand, if we come across one, lets not get judgmental. Lets give the benefit of doubt to the one who posted it and try to understand the intention behind it. Enough said, lets put this to rest.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. விமர்சன வடிவில் வெறுப்பு - அனல் கக்க வேண்டாம் செய்யித் இபுராஹீம் அவர்களே
posted by Hasan (Khobar) [22 May 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4622

சகோதரர் ஜியா காக்கா மீதும் எங்கள் சங்க தலைவர் டாக்டர் இதுரீஸ் அவர்கள் மீதும் அதிகமான பாசமும் மரியாதையும் வைத்துள்ளவர்கள் நாங்கள். அதே நேரத்தில் தவறை சுற்றி காட்டும் அளவுக்கு எங்களுக்கு உரிமையும் உண்டு. எங்கள் மன்றத்திலும் அப்படிதான்.ஆதலால் விமர்சன வடிவில் வெறுப்பு - என்று தாங்கள் அனல் கக்க வேண்டாம்.

இன்னமல் அன்னியமாலு பிநியாத் தான் ...

அதற்காக வேண்டி மகா லட்சுமி , சீதேவி , மூதேவி, காட்பாதர் , Lord என்பதை எல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது.

We Know our English...But We know our Islam Also.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. முற்றுப்புள்ளி
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [22 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4623

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மக்களே! தவறுகள் ஏற்பட்டால் விட்டுக் கொடுக்க பழகிக் கொள்ளுங்கள் அதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகு.

சகோதரர் ஜியாவுதீன் அவர்கள் முதலில் எழுதிய " காட்பாதர் " என்ற சொல் தவறான அர்த்தத்தில் எழுதியது அல்ல என்பது தெளிவு.

அடுத்ததாக சகோதரர் ஹசன் அவர்கள் வேண்டுகோள்படி அவசியமற்ற - மார்க்கத்திற்கு முரணான - வார்த்தைகளை எழுதுவதை பிரசுரிப்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதும் சரிதான்.

ஆனால் சகோதரர் ஹசன் அவர்கள் , வேண்டுகோளில் வல்லினம் , மெல்லினம் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்.

-------------------------------------------------

எது எப்படியானாலும் சரி நம் சகோதரர்கள் அறிந்தோ அறியாமலோ ஏதும் தவறு செய்திருப்பின் மற்றவர் அதை நாசூக்காக சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.

அந்த சுட்டிக்காட்டுதலை மற்ற சகோதரர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் இப்படி தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் நடக்காது.

செய்திக்கு அவசியமான , ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து நமது மன உளைச்சலை தவிர்க்கலாம்.

-------------------------------------------------

எனவே மக்களே! இத்தோடு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - செய்திக்கு தேவையான கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மெடிக்கல் & ENGINEER CUTOFF
posted by Velli Siddiq (RIYADH) [22 May 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4631

Best wishes to Dr Idhrees.

Kindly requested to change prize from top scorer to ENG cutoff & Medical Cutoff.

Reason to change all students concentrate on total but fail to reach both ENG cutoff & Medical Cutoff.

All students cutoff marks around 170-180 only in both ENG & medical. Prize announce Above 197 ENG Cutoff first 4 students RS 25,000 Prize announce Above 197 Medical Cutoff first 4 students RS 25,000 900 marks enough to reach 197 ENG Cutoff or 197Medical Cutoff.

Please take your first job to know all 12th standard students know about cutoff .

Except toppers others should select engineer field or medical field.

sample mark sheet to reach Medical Cutoff:
BIOLOGY 198 Marks
PHYSICS 197 Marks
CHEMISTRY 197 Marks
ENGLISH 100 Marks
ARABIC OR TAMIL 100 Marks
MATHS 100 Marks

Sample mark sheet to reach ENG Cutoff:
MATHS 198 Marks
PHYSICS 197 Marks
CHEMISTRY 197 Marks
ENGLISH 100 Marks
ARABIC OR TAMIL 100 Marks
BIOLOGYOR COMP 100 Marks

This year more than 60 students scoring 1000 marks. But only 1 merit doctor & few merit engineer. Every years nearly from 4 years ENG students paying more 7 crores from kayal patnam. Maximum money from bride home as a dowry, keep gold in bank for interest or sold property. If IQRA Implement this at least 20 students will get above 185 engineer cutoff & 5 students will get above 195 doctor cutoff.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. GODFATHER
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [22 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4641

இதுகுதான் அதிகம படிக்க கூடாதுன்டு சொல்ரது ! பாருங்க தெவை இல்லத விவாதம்.

but Quite interesting


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. yennapa
posted by DRNOORDEEN (colombo) [23 May 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 4658

அன்புள்ள உடன் பிறப்புகேள இப்போதான் இந்த செய்திஐ படித்தேன் தவறு எனபது எல்லாருக்கும் வருவதுதான் அதற்கு இப்படியா என்னப்பா இதெல்லாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. دع ما يريبك الى ما لا يريبك
posted by Ibrahim Faisal (Riyadh) [23 May 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4661

دع ما يريبك الى ما لا يريبك
DAH MA YAREEBUK ILA MAA LAA YAREEBUK
I hope every person familiar with afore mentioned Arabic Word. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. original
posted by Noohu T (hh) [23 May 2011]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 4669

The original Godfather is Marlon Brando


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. புயல் அடித்து ஓய்ந்து விட்டது பார்தீர்களா...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [23 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4675

என்ன சகோ. டாக்டர் நூர்தீன் அவர்களே, சுகம் தானா...இப்படி லேட் ஆக வந்து இருக்கின்றீர்களே, புயல் அடித்து ஓய்ந்து விட்டது பார்தீர்களா...

சரிங்க, தாங்கள் எங்கு இருக்குறீர்கள் என்றே தெரியவில்லை, சில சமயம் கத்தார், சில சமயம் காயல், சல சமயம் சென்னை, தற்போது ஸ்ரீலங்கா. டாக்டர் ரௌண்ட்ஸ்க்கு (ROUNDS ) போயிருக்கிறார் என்பது இது தானோ.

அடிக்கடி வாங்க, நல்ல கருத்து சொல்லுங்க.சரிங்களா.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved