தமிழக அரசின் கவுன்செல்லிங் முறை உதவிக்கொண்டு MBBS, BDS, B.Pharm, B.Sc. Nursing, B.P.T., Diploma in Nursing போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் தங்கள் புகைப்படங்களை இணைக்கும் விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிற விண்ணப்பங்கள் போல் இல்லாமல், இவ்வகை விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில் - மாணவர் பெயர், புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
பெயரையும், தேதியையும், புகைப்படத்திற்கு மேல் - புகைப்படம் எடுத்தப்பின் - எழுதக்கூடாது. புகைப்படம் எடுக்கும் போதே - பெயர் மற்றும் தேதி அடங்கிய அட்டை ஒன்றினை மாணவர் கையில் தாங்கியிருக்கவேண்டும்.
|