உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012 கல்வியாண்டில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலவுள்ள காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏழை-எளிய மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் 14.05.2011 முதல் 17.05.2011 (இன்று) வரை வினியோகிக்கப்பட்டு வருகிறது.
காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரையில் விண்ணப்பங்களைப் பெறலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.05.2011 தேதிக்குள் இக்ராஃ அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும், அதன் செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் தெரிவித்துள்ளார்.
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் தவிர்த்து, சிறுபான்மை சமுதாய மாணவ-மாணவியருக்காக தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் (ஐ.ஆர்.எஃப்.) நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களும் அவற்றின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ-மாணவியருக்கு இக்ராஃ இலவசமாக வினியோகித்து வருகிறது.
கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவ வினியோகம் குறித்து இக்ராஃ சார்பில் வெளியிடப்பட்டள்ள பிரசுரம் பின்வருமாறு:-
|