Re:...பழகுவதற்கு இனியவர் பாப்பதற்கு எளியவர் posted bymackienoohuthambi (colombo)[18 October 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45845
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பழகுவதற்கு இனியவர் பார்ப்பதற்கு எளியவர் நன்முத்துக்கள் நால்வரை மொகுதூம் பள்ளி ஜமாத்துக்கு தந்தவர். அருகிலிருந்து தொழுகும்போது மணமாக இருப்பார் அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பார். இவ்வளவு சிறப்புக்களை உடைய சகோதரர் எனது இனிய நண்பர் புனித ரமலானில் 30 நாட்களில் தராவீஹ் தொழும்போதும் என் அருகிலேயே இருப்பார். அவர்கள் கையில் கொண்டு வரும் குளிர்ந்த நீரில் பன்னீர் மனம் வீசும் அதை நான் அவசியம் கேட்டுப் பருகி வந்தேன்.அவர்கள் மக்களில் ஒரு ஹாபிழ் தொழுக வைக்கும்போது காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடும் திருமறை வசனங்கள் தென்றல் காற்று போல் வந்து இதயத்தை வருடும் செவிப் புலன்களுக்கு தேனாக இதமாக வந்து ஐம்புலன்களையும் குளிர வைக்கும். தம்பி, என்ன நீ குர் ஆனை திறந்து வைத்துக் கொண்டா ஓதுகிறாய், தெளிந்த நீரோடைபோல் இறை வசனங்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டோரை மெய் மறக்க செய்கிறதே என்று அந்த இறை மறை செல்வனை நான் பாராட்டும்போது ''இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்'' என்று வள்ளுவம் சொல்கிறதே அதுதான் நினைவுக்கு வரும் 10 நபர்களை . சுவர்க்கத்துக்கு அழைத்து செல்லும் பல மக்களை பெற்று ஆளாக்கிய பெருமை labeeb காக்கா அவர்களை சாரும்.
மக்கள் தான் செல்வத்துடனும் செல்வாக்குடனும் இருக்கிறார்களே என்று நினைத்து அவர் எப்போதும் சும்மா இருந்ததில்லை சுறுசுறுப்பாக ஏதாவது தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.எனக்கு அவரைப் பார்த்த பிறகு ஒரு உற்சாகம் வரும்.அவர் எனக்கு ஒரு ரோல் மாடல்.என்று சொன்னால் அது மிகை யாகாது. எனது கருத்துப் பதிவுகளை மிகவும் ரசிப்பவர் எனது விசிறி என்றே சொல்லி இருக்கிறார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்கள் பாவங்களை மன்னிப்பானாக அவரது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக ஒரு இனிய குடும்ப தலைவரை இழந்து நிற்கும் அவர்கள் மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross