செய்தி: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) பயிற்சி: “குறைந்தது ஐந்து கலைஞர்களாவது காயலில் உருவாக வேண்டும்!” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விழுதுகள் வேருக்கு எடுக்கும் விழா... posted bymackie noohuthambi (colombo)[30 October 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45875
படித்து பரவசம் அடைந்தேன்.
நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நான் வாழும்பொழுது வனப்புடன் வாழ ஒரு குடிசை கட்டித்தாருங்கள் என்று ஒரு கலைஞன் சொல்கிறான். அரபி ஹாஜியார் அவர்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து கௌரவிப்பதும் வெறும் பத்தாயிரம் அளிப்பதும் அவரது கவுரவத்துக்கு இழுக்கு என்று நினைக்கிறேன்.
அவர்கள் மழையில் நனைந்து வந்து கொண்டிருந்தார்கள் சாஹிப் அப்பா தைக்காவிலிருந்து வைகறை பொழுது அது.எங்கே மழையில் செல்கிறீர்கள் வாருங்கள் வீட்டுக்கு என்று என் வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு புது குடையும் ஒரு சால்வையும் போர்த்தி அவர்களை நான்கௌரவித்த நாள் என் நினைவுக்கு வருகிறது.
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
என்று தன் காதலியை பார்த்து ஒருவன் பாடுவதாக கவிப் பேரரசு வைரமுத்து பாடுவார்.
இந்த அரபு வனப்பெழுத்து வரைகலை அரபி ஹாஜியாருக்கு எப்படி அத்துப்புடியாகியது என்று நான் வியந்து அசந்து போன காலங்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு சில அற்ப ரூபாய்களுக்கு அவர் வானில் ஏறி விலை மதிக்க முடியாத முத்துக்களை நமது வீட்டு முகப்பில் பதித்து தந்து செல்வார். என்னங்க இத்தனை எழுத்துக்கு இவ்வளவு ரூபாயா என்று அவரை கிண்டலாக கேட்பேன் . பேசாமல் இந்த தொழிலுக்கே வந்து விடலாம் போல் தெரிகிறதே என்பேன். நல்லா வாருங்களேன் நான் சொல்லி தருவதற்கு தயாராக இருக்கிறேன் யாருமே இந்த துறையை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறார்களே என்று அவர்கள் ஏங்குவார்கள். எங்கே தன் தொழிலுக்கு யாரும் போட்டியாக வந்து விடுவார்களோ என்ற ஏக்கம் நிறைந்த இந்த காலத்தில் வெள்ளத்தியாக அவர்கள் பேசுவது வியப்பாக இருக்கும்
அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுக்க வேண்டும் தமிழக அரசை நமது சட்டமன்ற உறுப்பினர் அனிதா அவர்களும் நம் மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்களும் அணுகி அவருக்கு அரசு விருதும் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த இணையத்தளம் மூலம் அன்பு கோரிக்கை வைக்கிறேன்.
நமதூரில் ஹாபிள்களும் உலமாக்களும் அதிகம் இப்படிப்பட்ட அரபு வனக்கலை வல்லுநர்கள் முன்காலத்தில் இருந்தார்கள் என்று முன்னோர்களை போற்றி புகழ்வதிலும் அவர்களுக்காக விழா எடுப்பதிலும் நாம் வல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த கலையை நாம் தொட்டுப் பார்க்கவில்லை. முஹ்தார் அவர்கள் விருப்பம் மிக சரியானது. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு அந்த காலம் இப்போது கனிந்து வந்துள்ளது. முஹ்தார் அவர்கள் கோடு போட்டுள்ளார்கள் நம்மவர்கள் ரோடு போடவேண்டும். அவர்கள் புள்ளி வைத்துள்ளார்கள் நாம் கோலம் போட வேண்டும்.நமது இக்ரா கல்வி சங்கம் இதற்காகவும் ஒரு வழிகாட்டலை இளைஞர்களுக்கு சொல்லலாம்.மிக சங்கடமான ஒரு கலை ஆனால் அதை தெரிந்து கொண்டால் அதற்காக நேரம் ஒதுக்கினால் அது கைகூடும். மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை. அரபி நமக்கு கைவந்த கலை அதை இப்படி ஒரு மாற்று யோசனையுடன் சிந்தித்தால் பல வாய்ப்புக்கள் இந்த துறையில் கிடைக்கும். அரபி ஹாஜி யாரைப் போல குறைந்த தொகை வாங்க வேண்டியதில்லை. கொட்டி கொட்டி கொடுப்பார்கள். ஆவன செய்யுங்கள் அல்லாஹ் துணை நிற்பான்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முஹ்தார் அஹமத் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross