செய்தி: எல்.கே. மேனிலைப் பள்ளியருகிலுள்ள மீன் சந்தைக் கழிவுகள் மழை நீருடன் கலந்து சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி மமக சார்பில் நகராட்சியில் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... அகற்றும் போராட்டம் ஞாபகம் வருதே... posted bymackie noohuthambi (colombo)[11 November 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45893
1992 என்று நினைக்கிறேன் மீன் கழிவுகள் அல்ல, மீன் வியாபாரமே இந்த பள்ளிக் கூடத்தின் முன்னால் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்த காலம் அது.
சில இளைஞர்கள் இந்த நாற்றத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று களம் இறங்கினார்கள். அகிம்சையோடு ஆரம்பித்த போராட்டம் காவல் துறையின் கெடுபிடியால் வன்முறையாக மாறி ஊர் முழுவதும் பற்றி எரிந்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பாளையம்கோட்டை சிறையிலே அடைக்கப் பட்டார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது.
எனவே எந்த போராட்டமானாலும் அது சாத்வீகமாக இருக்கும் வரைதான் அதற்கு வீரியம் இருக்கும். உணர்ச்சி வசப்படுதல் அல்லது உணர்ச்சி வசப்பட தூண்டுதல் இவற்றின் விளைவுகள் கசப்பாகத்தான் இருக்கும் என்ற நிதர்சன உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பித்த போது நிலைமை சாதகமாக இருந்தது ஆனால் வன்முறை வெறியாட்டங்கள் அந்த போராட்டத்தை நீர்த்து போக செய்தபோது உடனடியாக காந்தி அவர்கள் அதை கைவிட்டு உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அஹிம்ஸை வழியில்தான் சுதந்திரம் கிடைத்தது.
எனவே நமது இளைஞர்கள் நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது வெற்றியை ஈட்டி தாராது என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோம். அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross