Re:...ஒரு இனிய வேண்டுகோள் posted bymackie noohuthambi (colombo)[12 November 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45897
நல்லவைகளை முந்திக் கொண்டு செய்வதில் காயல் நலமன்றங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு செயலாற்றுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து செல்லும் வழித்தடம் நேரம் இவற்றை அறிவிக்கும் பலகை ஊரில் பல இடங்களில் வைக்கப்பட்டது. அதற்கு ஜக்வா முன்னோடியாக இருந்தது. அதில் குறிப்பிட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் வந்து செல்கின்றனவா என்பது வேறு விஷயம். ஆனால் அப்படி ஒரு பலகை கூட நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை தந்தது.
நான் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நமதூரில் இருசக்கர மூன்று சக்கர வண்டிகள் வேகமாக அங்கும் இங்கும் செல்கின்றன. பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகள் சிறு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் இதனால் பாதிக்கப் படுகிறார்கள். எனவே ''இது மாணவ மாணவிகள் சிறு குழந்தைகள் விளையாடும் பகுதி. வாகனத்தை மெதுவாக ஓட்டவும்'' என்று ஒவ்வொரு சந்நிதியிலும் ஒரு போர்டு வைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு முன்னுதாரணமாக எங்கள் புதுக்கடை தெரு முனையில் எங்கள் வீட்டு சுவரிலேயே அந்த அறிவிப்பு பலகை வையுங்கள் என்று சொன்னேன். கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார்கள். மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் தயவு செய்து ஆவன செய்யுங்கள்.
ஒரு நன்மையை செய்ய பரிந்துரை செய்வோருக்கு அதை செயல்படுத்தும் நபருக்கு கிடைக்கும் கூலியே கிடைக்கும். என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா...
MANN YASHFAU SHAAFA ATHAN HASANATHUN YAKUN LAHOO NASEEBUM MINHAA .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross