ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எமது அமைப்பின் கூட்டம் 15.10.2017 அன்று மன்றத்தலைவர் அல்ஹாஜ் M.A.S. செய்யது அபுதாஹிர் அவர்கள் தலைமையில் பிஸ்மி ஜெம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
துணை தலைவர் அல்ஹாஜ் S.M.செய்யது அபுதாஹிர்,ஜனாப் J.S உதுமான் மற்றும் ஜனாப். உஜைர் மவ்லானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் நுஸ்கி கிராஅத் ஓதினார்.
தலைமையுரைக்குப்பின் பரிசீலனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் கூட்டம் கூட்டப்பட்டதின் நோக்கத்தை விளக்கி பேசினார்கள்.
இதுவரை எம் மன்றம் ஆற்றிய பணிகளையும், வரவு செலவு கணக்குகளயும் தலைவர் அவர்கள் வாசித்தார்கள். அதை கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
மன்ற உறுப்பினர் பிலால் அவர்களின் நன்றியுரைக்குப்பின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலிலாஹ்!
தீர்மானங்கள்:
1. நமது அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் M.AS. செய்யது அபு தாஹிர் அவர்கள் நமதூர் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளையின் தலைவராகவும், நமது அமைப்பின் செயலாளர் ஹாஃபிழ் M.A.செய்யது முஹம்மது அவர்கள் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளையின் அறங்காவலராக பொறுப்பேற்றதற்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துவதோடு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் அறக்கட்டளைக்கு நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது
2. நமதூர் ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபேர் டிரஸ்டிற்கு அவசர கால உதவிக்கு (EMERGENCY FUND) ரூபாய் ஐயாயிரம்(Rs.5000/-) வழங்குவது
3. நமதூரைச்சார்ந்த சகோதரர் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் மனைவிவியின் மருத்துவ சிகிச்சைக்கு பொருளாதார உதவி செய்வது
4. நமது அமைப்பின் பொருளாளர் O.L.சேக் அப்துல் காதிற் அவர்களின் தாயார் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹாஜி S.A. உவைஸ்னா லெப்பை அவர்கள் மனைவியின் வஃபாத்திற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் ஙாயிபு ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|