காயல்பட்டினத்திலுள்ள நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்து முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, சென்னையிலுள்ள - தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை செயலாளரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (SH 176) மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு பணிகள் குறித்து நடப்பது என்ன? குழுமம் - கடந்த சில மாதங்களாக, கோரிக்கைகள் வைத்து வருகிறது.
செப்டம்பர் 4 அன்று மாவட்ட ஆட்சியரிடம் - பல நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.
அதில் -
// பழுதடைந்த ஊர் பெயர் பலகைக்கு பதிலாக புதிய பலகை நிறுவுதல்
// தாயிம்பள்ளி அருகில் கூடுதலாக ஒரு வேக தடையும், பத்திர பதிவு அலுவலகத்திற்கு அருகே ஒரு வேக தடையும் அமைப்பது
// மாநில நெடுஞ்சாலையோரம் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்துதல்
// ஜாமியுல் அஜ்ஹர் சந்திப்பில் மிகவும் பழுதடைந்துள்ள சாலையை புனரமைப்பது
ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
வேக தடை சம்பந்தமாக மார்ச் மாதம் பதில் வழங்கிய நெடுஞ்சாலைத்துறை - விரைவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது.
செப்டம்பர் மாதம் நடப்பது என்ன? குழுமம் முன்வைத்த மணலை அப்புறப்படுத்தும் கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் - அஜ்ஹர் சந்திப்பு அருகில் உள்ள பழுதடைந்த சாலைப்பணிகள், அக்டோபர் 30 க்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டும், இது வரை - பணிகள் துவக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக இம்மாதம் துவக்கத்தில், துணை கோட்டப்பொறியாளரிடம் வினவியதற்கு - இரு வாரத்தில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இதுவரை அப்பணிகள் துவக்கப்படாததால், அங்கு பல்வேறு சிறு விபத்துகள் அவ்வப்போது நடந்துவருவதை கருத்தில் கொண்டு - நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்றிட உத்தரவிட கோரி, சென்னையிலுள்ள – தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அரசு செயலருமான திரு ராஜிவ் ரஞ்சன் IAS அவர்களிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக 14.11.2017. அன்று நேரில் மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 14, 2017; 9:45 pm]
[#NEPR/2017111401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|