காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த குப்பைகள், நகராட்சியால் அகற்றப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் நகராட்சியால் வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையிலும், காயல்பட்டினம் மகுதூம் தெரு மேல் பகுதியிலுள்ள ஒரு வெற்று நிலத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டும் பொறுப்பற்ற செயலை நீண்ட காலமாகச் செய்து வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் சிலர், இதுகுறித்து – உரிய நடவடிக்கை எடுக்கப்பட முயற்சிக்குமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தில் படங்களுடன் தமது முறையீட்டைப் பதிவு செய்திருந்தனர்.
அப்படங்களுடன் கூடிய தகவல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” குழுமத்தால் அனுப்பப்பட்டிருந்தது. தனக்குத் தகவல் கிடைத்ததும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, அங்கு பொக்லைன் இயந்திரத்தையும், தேவையான துப்புரவுப் பணியாளர்களையும் அனுப்பி, குப்பைத் தேக்கத்தை முழுமையாக அகற்றியுள்ளார்.
இதற்காக, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
|