காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சிசிடீவி கேமராக்களை நிறுவுவதில் நகராட்சி அலட்சியமாக இருப்பதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் புகார் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழக அரசு - 2012 ஆம் ஆண்டு, TAMILNADU URBAN LOCAL BODIES (INSTALLATION OF CCTV UNITS IN PUBLIC BUILDINGS) RULES 2012 என்ற விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்த விதிமுறைகள்படி - ஒரு நகரின் பல்வேறு பொது இடங்களில் - CCTV கேமராக்கள், பாதுகாப்பு கருதி, நிறுவப்படவேண்டும். இந்த விதிமுறைகளை அமல்படுத்தவேண்டிய முக்கிய பங்கு - நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் சமீப காலங்களில் அதிகரித்துள்ள கொள்ளை உட்பட பல்வேறு சமூக விரோத சம்பவங்கள், CCTV கேமராக்கள் பொறுத்தப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இருப்பினும் - காயல்பட்டினம் நகராட்சி, இது சம்பந்தமாக பல்வேறு தருணங்களில் நினைவூட்டல் செய்யப்பட்டும், அலட்சியமாக உள்ளது.
தனது கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி வளாகம், பேருந்து நிலையம், அம்மா உணவகம் போன்ற இடங்களில் கூட, விதிமுறைகள் கட்டாயப்படுத்தியும், இது வரை CCTV கேமராக்கள் பொறுத்த நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தவிர - நகரில் உள்ள இதர பொது இடங்களில் (கல்யாண மண்டபங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை) CCTV கேமரா பொருத்தவும் - இதுவரை எவ்வித நடவடிக்கையும், நகராட்சி எடுக்கவில்லை.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன் IPS இடமும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக நேற்று மனு கொடுக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 13, 2017; 5:45 pm]
[#NEPR/2017111301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|