எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக, 'குட்டி ஆகாயம்' சிறார் இதழின் ஆசிரியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு:
இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு இடங்களில் கதைசொல்லல் நிகழ்வுகளை (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிட்டுள்ளோம்.
நிகழ்வு எண்கள் 22 & 23
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் 'கண்ணும்மா முற்றம்', குழந்தைகளிடம் – இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.
இந்த கதைசொல்லல் அமர்வுகள், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 22 & 23-ஆவது நிகழ்வுகளாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 7 & 8-ஆவது நிகழ்வுகளாகவும் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புற இயங்கும் அரசு பொது நூலகம்
1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமதூரின் அரசு பொது நூலகம், கட்டிட சீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு - புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 32,000 க்கும் மேலான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கிளை நூலகத்தில், சுமார் 3200-க்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாகவும் & 150-க்கும் மேலானவர்கள் புரவலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, Modern Times & The Man Who Planted Trees ஆகிய இருவேறு படங்களின் திரையிடல் & பள்ளி மாணவர்களுடன் புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா ஆகியன அரசு பொது நூலகத்தின் இணைவில் சிறப்புற நடந்த நிகழ்வுகளாகும்.
அரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பானது, அரசு பொது நூலகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை வருங்காலங்களிலும் (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களுக்கான மாதம்!
பல்வேறு நோக்கங்களுக்காக, நவம்பர் மாதம் குழந்தைகளுக்கு பிடித்த மாதாமாக இருக்கிறது. மூன்று முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட இம்மாதத்தில், அவர்களின் குதூகலம் மிகுதியாக இருப்பது இயல்பான ஒன்றே!
இந்திய தேசத்தின் முதல் கல்வி அமைச்சர் ஜனாப் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 11-ஆம் தேதியை தேசிய கல்வி தினமாகவும், நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாள், குழந்தைகள் தினமாகவும் கொண்டாடுகிறோம்.
இது தவிர, இந்திய நூலகச் சங்கம் உருவானதை நினைவுகூறும் வகையில், நவம்பர் 14-ஆம் தேதியை தேசிய நூலக தினமாகவும் & நவம்பர் 14-20 வரையுள்ள வாரத்தை தேசிய நூலக வாரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு - இந்த ஆண்டின் கொண்டாட்டங்களை, இருவேறு கதைசொல்லல் அமர்வுகளாக நமதூரில் நடத்தவிருக்கிறோம்.
முதலாம் நிகழ்வு, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து - அப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும்; இரண்டாம் நிகழ்வு, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் வைத்து - ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் சிறார்களுக்கும் நடக்கவிருக்கிறது.
அரசு பொது நூலகத்தில் நடக்கவிருக்கும் முதலாவது கதைசொல்லல் நிகழ்வு இது!
‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழ்!
கோயம்புத்தூரில் இருந்து வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
சிறார் இலக்கியவாதிகளான இவர்கள், பல்வேறு கதை அமர்வுகள், சிறார் நூல் மதிப்புரைகள் & குழந்தைகள் குறித்த உரையாடல்களை தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ நூல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் குழந்தைகளின் கலை ஆக்கங்களை பதிப்பிக்கிறது.
சென்ற 08.10.2017 அன்று எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & முஹ்யித்தீன் மேனிலைப்பள்ளி இணைவில் நடைபெற்ற சிறார் இலக்கிய மன்றத்தில் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி), மாணவர்களுக்கு இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டு – அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு…
நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, மாணவர்களும் / பெற்றோர்களும் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி & ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி நிர்வாகங்களையோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவையோ (கீழே அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன) தொடர்பு கொள்ளலாம்.
சாளை பஷீர் ஆரிஃப்: 9962841761
முஜீப் (நூலகர்): 9894586729
கே.எம்.டீ.சுலைமான்: 9486655338
தொடர்புடைய முந்தைய பதிவுகள்!
1> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் திரு. குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!
(07.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19883)
2> சிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
3> தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா!!
(06.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19767)
4> மாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி!!! எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது!!!
(10.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19740)
5> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
|