மலேஷியா நாட்டின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு, அங்கு நடைபெற்ற பட்டமளிபபு விழாவில் பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘தேங்காய்ப்பால்’ டீ.எச்.எம்.செய்யித் அலாவுத்தீன் – எஸ்.இ.ஜெய்லானி பீவி தம்பதியின் மகன் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ (வயது 32).
மலேஷியா நாட்டில் பணியாற்றி வரும் இவர், அங்குள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, எம்.ஏ., எம்.ஃபில்., படிப்புகளை முடித்துத் தேர்ச்சி பெற்றமைக்காக – நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் பயின்று, திருக்குர்ஆனை மனனம் செய்து, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும், சென்னையிலுள்ள புகாரிய்யா அரபிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயின்று, ‘ஆலிம் அல்புகாரீ’, பி.ஏ. (அரபி), பி.பி.ஏ. (சென்னை பல்கலைக் கழகம்) பட்டப் படிப்பு ஆகியவற்றுக்கான பட்டமும் பெற்றுள்ளதும், பல்வேறு தலைப்புகளில் 30க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை.
தகவல் & படங்கள்:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ A.M.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ &
மவ்லவீ ஹாஃபிழ் H.B.N.ஷாஹ்ஸாத் அல்புகாரீ
|