சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அதன் ஆண் / பெண் உறுப்பினர்களுக்குத் தனித்தனியே பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, சில நடைபெற்று முடிந்துள்ளன.
மகளிருக்கான சமையல் போட்டி சிங்கப்பூர் PAYA LEBAR நகரில், 99 BISTRO எனும் முகவரியில் நேற்று (11.11.2017.) நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த – அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கான போட்டிகளில் இன்று 11/11/2017 சிங்கப்பூர் பாயாலேபரில் உள்ள 99 பிஸ்ட்ரோ உணவவகத்தில் வைத்து சமையல் போட்டி நடைபெற்றது.
இதில் மன்ற உறுப்பினர்களின் துனைவியர்கள் பங்கெடுத்தனர். குழுவுக்கு இருவர் வீதம் ஒன்பது குழுக்களில் பதினெட்டு பேர் பங்கெடுத்தனர்.
ஆட்டிறைச்சியில் சமைத்த உணவுகள், இனிப்பு வகைகள் என அருமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். எடிக்கேட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஷெஃப் தீன், எம்.என்.எல். முஹம்மது ரபீக் மற்றும் 99 பிஸ்ட்ரோ உணவத்தின் உரிமையாளர் சுலைஹா இத்ரீஸ் ஆகியோர் நடுவர்களாக பொறுப்பு வகித்திருந்தனர்.
இப் போட்டியில் பிரதான உணவுக்கான முதல் பரிசினை பாத்திமா சபீனா(ஏ.ம். உதுமான்), சல்மா நஸரின் (இஸ்மத்) குழவினரும், இரண்டாம் பரிசினை மீராநாச்சி (செய்யத் அப்துல் ரஹ்மான்), ஆர்.எஸ்.எச். பாத்திமா (மொஹிதீன் சாஹிப்) குழுவினரும் வென்றனர்.
மேலும், இனிப்பு வகைகளுக்கான போட்டியில் மீராநாச்சி (செய்யத் அப்துல் ரஹ்மான்), ஆர்.எஸ்.எச். பாத்திமா (மொஹிதீன் சாஹிப்) குழுவினர் முதல் பரிசினையும், பாத்திமா சபீனா (ஏ.ம். உதுமான்), சல்மா நஸரின் (இஸ்மத்) குழுவினர் இரண்டாம் பரிசினையும் வென்றனர்.
போட்டியில் பங்கெடுத்த பெண்களுக்களுக்கு சமைப்பதற்காக தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அனைவரும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியாளர்களுக்கும் அவர்தம் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்கள்:
M.N.L.முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
தகவல்:
தவ்ஹீத் & ஜமீல்
(போட்டிக் குழு) |