காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் முடிக்கப்படவுள்ள அக்கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள வளாக நிலத்தை நன்கொடையாக வழங்கிய நகரப் பிரமுகர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உட்பட சில கல்வெட்டுகள், நகராட்சி ஆணையர் அறை அமைந்துள்ள பகுதியிலும், இதர பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்தன.
படங்கள்: கோப்பு
அவற்றுள், நிலம் கொடுத்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, உடைக்கப்பட்ட பழைய கட்டிட சிதிலங்களுக்குள் புதையுண்டிருந்ததை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த என்.எம்.அஹ்மத், பீ.எஸ்.அப்துல் காதிர் ஆகியோர் கண்ணுற்று, அதைத் தூசு தட்டி, நகராட்சி ஆணையர் அலுவலகம் (அந்நேரத்தில் பூட்டிக் கிடந்ததால் அந்த அறைக்கு) முன் வைத்துவிட்டு வந்துள்ளனர்.
|