கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்ற (மக்வா) பொதுக்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அறக்கட்டளைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மலபார் காயல் நலமன்றத்தின் (மக்வா) 20வது பொதுக்குழு 22.10.2017 அன்று மாலை 6 மணிக்கு கோழிக்கோடு ஜெயில்ரோட்டில் உள்ள சாளை உஸ்மான் அவர்கள் வீட்டு மாடியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்... அதன் நிகழ்முறைகளும்.... தீர்மானங்களும்.
கிராஅத்
ஆரம்பமாக உறுப்பினர் ரயீஸ் அவர்களின் மகன் ஜமால் முஹம்மது அழகிய மழலை குரலில் கிராத் ஓதி துவக்கி தந்தார்.
வரவேற்பு / தொகுப்பு
மன்ற செயலார் N.M. மொய்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
செய்தி தொடர்பாளர்
சு.நா. மீரான் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றத்துடன், கடந்த பொதுக்குழுவின் மினிட்ஸ் வாசித்து கூட்டத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொண்டார், அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தலைமை
கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய நம் மன்ற தலைவர் S.N. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நம் மன்றம் நம் உறுப்பினர்களின் சிறப்பான ஒத்துழைப்பால் சிறந்த முறையில் செயல் பட்டு வருவதாகவும் இன்னும் சிறப்பாக நாம் நம் மன்றத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்..
செயலாளர் உரை
அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய மன்ற செயலார் N.M. மொய்தீன் அப்துல் காதிர் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் மன்றம் செயல்பாடுகளை குறித்து விளக்கமாக பேசிய அவர்
நம் மன்றத்தின் செயல் பாடு திறம்பட உள்ளதாகவும் பொருளாதார சூழ்நிலையில் பல இன்னல்களை சந்தித்து வரும் இந்த நேரத்திலும் நம் மன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருவதாக பாராட்டி பேசினார்...
தொழுகை
மக்ரிபு பாங்கு கொடுக்கப்பட்டு நம் உறுப்பினறும் ஷிபா வின் செயலாளர் s. m. மஸ்வூத் அவர்கள் தலைமையேற்று மக்ரிபு தொழுகை ஜமாஅத் நடத்தினார்கள்
இடைவேளை
இடைவேளை சமயத்தில் பிஸ்கட் மற்றும் சுவையான மிளகு பால் அனைவர்க்கும் பரிமாற பட்டது
தொழுகைக்கு பிறகு ஆதில் சுலைமான் அருமை மகனார்முஹம்மது ஹபீஸ் தம் மழலை குரலால் இறைமறை ஓதி அனைவரையும் நெகிழ செய்தார்.
கணக்கு தாக்கல்
கடந்த பொதுக்குழு முதல் இந்த பொதுக்குழு வரை உள்ள கணக்குகள் பொருளாளர் s. ஷேக் சலாஹுதீன் தாக்கல் செய்தார் கணக்கு தணிக்கையாளர் சீனா மொஹதூம் அவர்கள் ஒப்புதல் அளித்தார் அறிக்கைஏக ஒப்புதல் பெறப்பட்டது...
மேலும் உறுப்பினர்கள் சந்தா விஷயத்தில் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் அவர்கள் எப்போது அழைத்தாலும் தான் வந்து சந்தா தொகை பெற்று கொள்வதாகவும் தனது உரையில் கூறினார்...
ஷிஃபாவின் புதிய தலைமை
ஷிஃபா புதிய தலைமை குறித்து மன்ற முன்னால் செயலாளரும் தற்போதைய ஷிஃபா அரங்காவளருமான சாளை உஸ்மான் அவர்கள்
ஷிஃபா அமைப்பானது தற்போது புதிய தலைமையேற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பணிகள் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நம் மன்ற முன்னால் தலைவர் s. m. மஸ்ஊத் அவர்கள் ஷிஃபா வின் செயலராக தேர்தெடுத்திருப்பது குறித்து நம்பமன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்..
ஷிஃபா செயலாளர் உரை.
ஷிபாவின் செயலாளர் s. m. மஸ்வூத் அவர்கள் இப்பொது செயற்பட கூடிய புதிய நிர்வாகிகள் குறித்தும் தற்போதைய செயல்பாடு நிலை குறித்தும் தெளிவு படுத்தி விளக்கமளித்தார்
மேலும் மக்கள் மருந்தகம் நமது ஊரில் சிறப்பான சேவை செய்து வருவதாகவும் ஊரில் பொதுநல அமைப்புகளால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் நம் மக்கள் மருந்தகம் இலவசமாக மருந்து வழங்கி சேவை செய்ததையும் எடுத்துரைத்தார்
உறுப்பினர்கள் கருத்து பறிமாற்றம்
உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் சந்தேகங்களையும் ஆரோக்யமான முறையில் பகிர்ந்து கொண்டனர்..
நன்றியுடன் முடிவடைந்தது
மன்ற துணை தலைவர் M.A.உதுமான் அப்துல் ராஜிக் நன்றி கூற நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
இரவு உணவு..
ஆபிதீன் பாய் ..சாஹிப் தம்பி குழுவினர்சிறப்பாக ஏற்பாடு செய்த இடியாப்பம் கறி ஜவ்வரிசி அனைவர்க்கும் இரவு உணவாக பரிமாறப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.N.மீரான்
(செய்தி தொடர்பாளர் – மக்வா)
|