காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள மஹான் தைக்கா ஸாஹிப் அப்பா தர்ஹாவில், 03.11.2017. வெள்ளிக்கிழமையன்று, 168ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் நடைபெற்றது.
ஸஃபர் 01ஆம் நாளன்று கொடியேற்றத்துடன் துவங்கி, அன்று முதல் ஸஃபர் 13ஆம் நாள் வரை அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதோடு, வித்ரிய்யா - மவ்லித் - புர்தா மஜ்லிஸ்களும் நடைபெற்றன.
கந்தூரி நாளன்று காலையில் வழமை போல கத்முல் குர்ஆன், வித்ரிய்யா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலையில் கந்தூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கை சரித சொற்பொழிவும் நடைபெற்றன. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
கந்தூரியை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சிறார் பல்லக்கில் அமர்த்தப்பட்டு, தஃப்ஸ் முழங்க நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் – 04.11.2017. அன்று அதிகாலையில், நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
|