சாலையை மறித்துப் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள காயல்பட்டினம் கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு மரங்களை அகற்றி ஏலம் விட – காயல்பட்டினம் நகராட்சிக்கு, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் கோரிக்கை மனுவைத் தொடர்ந்து இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கீழ சித்தன் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்று - சரிந்து விழும் நிலையில் உள்ளதாக பெறப்பட்ட அப்பகுதி மக்களின் புகார் அடைப்படையில், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - திருச்செந்தூர் கோட்டாட்சியரிடமும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடமும் - ஜூலை 25 தேதிய மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1 தேதிய கடிதம் மூலம் - இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, வட்டாட்சியரிடம் கேட்டு கோட்டாட்சியர் கடிதம் எழுதி, அதன் நகலை நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியிருந்தார்.
அதன்பிறகு, இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - செப்டம்பர் 26 தேதிய கடிதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் கள ஆய்வுகள் மேற்கொண்டு, வட்டாட்சியருக்கு அறிக்கை ஒன்று வழங்கியுள்ளார். அதில் கீழ சித்தன் தெருவில் சாய்ந்த நிலையில் இருந்த மரம் குறித்தும், நெய்னார் தெருவில் சாய்ந்த நிலையில் இருந்த ஒரு மரம் குறித்தும், தகவல் அனுப்பியுள்ளார்.
ஆத்தூர் வருவாய் ஆய்வாளரின் தகவல் அடிப்படையில், திருச்செந்தூர் வட்டாச்சியர் - அக்டோபர் 6 கடிதம் மூலம், மரங்களை அகற்றிட - கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கடிதம் அனுப்பியுள்ளார்.
தற்போது - திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்கள், கீழ சித்தன் தெரு மரத்தை அகற்றவும், நெய்னார் தெரு மரத்தை அகற்றவும் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, அகற்றப்பட்ட மரத்தை ஏலம் விட்டு - அரசு கணக்கில் செலுத்திட தெரிவித்துள்ளார்.
கோட்டாச்சியரின் உத்தரவு வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 6, 2017; 12:30 pm]
[#NEPR/0611201701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|