| |
செய்தி எண் (ID #) 19873 | | | திங்கள், நவம்பர் 6, 2017 | வி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS, HK Thunders, K-United அணிகள் அரையிறுதிக்குத் தகுதி! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1648 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
வி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் 04.11.2017. அன்று துவங்கி, நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் நிறைவில் FAAMS, HK Thunders, K-United ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நேற்று (04/11/2017) காலை காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி துவங்கியது.
இன்றை முதல் போட்டியில் JSUM "A" அணியும், K-United "B" அணியும் விளையாடின. முதலில் பேட்டிங்செய்த 43 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக பரமசிவம் 28 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த K-United "B" அணியினர் 47 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக வஸீம் 24 ரன்களை எடுத்தார்.
இரண்டாவது போட்டியில் KUSC "B" அணியினரும், FAAMS அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த KUSC "B" அணியினர் 37 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக அஜின் 15 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங்செய்த FAAMS அணியினர் 27 ரன்களை மட்டுமே எடுத்தது தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக இக்னேஷ் 15 ரன்களை எடுத்தார்.
மூன்றாவது போட்டியில் JSUM "B" அணியினரும், K-United "A" அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த JSUM "B" 57 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக குமார் 17 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங்செய்த K-United "A" அணியினர் 58 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ஜெய்லானி 17 ரன்களை எடுத்தார்.
நான்காவது போட்டியில் KUSC "A" அணியினரும், HK Thunders அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர் 40 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக அஸார் 22 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய KUSC "A" அணியினர் 41 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக யாஸர் 34 ரன்களை எடுத்தார்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United "A" அணியினரும். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United "B" அணியினரும் விளையாட உள்ளார்கள்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|