சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அதன் ஆண் / பெண் உறுப்பினர்களுக்குத் தனித்தனியே பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, சில நடைபெற்று முடிந்துள்ளன.
மகளிருக்கான கேரம் விளையாட்டுப் போட்டி சிங்கப்பூர் BEDOK நகரில், BLOCK 98இல் உள்ள – மன்ற ஆலேசாகர் பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அணிக்கு இருவர் வீதம் 12 அணிகளில் 24 மகளிர் கலந்துகொண்டு, தம் திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.
மகளிருக்கான பவ்லிங் போட்டி 18.10.2017. அன்று நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த வாரம் சமையல் போட்டி நடைபெறவுள்ளது. இதில், அணிக்கு இருவர் வீதம் 9 அணிகளில் 18 பேர் கலந்துகொண்டு, தம் கைத்திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.
தொடர்ந்து – திருமறை குர்ஆன் மனனப் போட்டி, இஸ்லாமிய & பொது அறிவு வினாடி-வினா போட்டி, வேகநடைப் போட்டி, பொருட்களைக் கலைத்துச் சேர்க்கும் Mix & Match போட்டி, கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை மகளிருக்காக நடத்தப்படவுள்ளன.
மகளிருக்கு நடத்தப்படும் போட்டிகள் அனைத்தும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குட்பட்டே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தவ்ஹீத் & ஜமீல்
(விளையாட்டுக் குழு) |