வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்திய எழுவர் க்ரிக்கெட் போட்டியில், FAAMS அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் V7 கிரிக்கெட் 2017 : FAAMS அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
லீக் போட்டிகள் 5ஆம் தேதி முடிவுற்றது. அதன் இறுதியில் FAAMS, K-United "A", HK Thunders மற்றும் K-United "B" ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இன்று காலை (11/11) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United "A" அணியினர்கள் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த FAAMS அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 60 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக அழகு 17 ரன்களை எடுத்தார். தொடர்ந்து பேட்டிங்செய்த K-United ”A" அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 23 ரன்களைபெற்று தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ரியாஸ் 8 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United "B" அணியினர் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 57 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக முஹம்மது அஸாருத்தீன் 27 ரன்களை அடித்தார். தொடர்ந்து பேட்டிங்செய்த K-United "B" அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 49 ரன்களை எடுத்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக வஸீம் 22 ரன்களை அடித்தார்.
பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் FAAMS அணியினரும், HK Thunders அணியினர்களும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர்கள் 7 ஓவர்களில் 35 ரன்களை அடித்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக சாஹூல் ஹமீது 11 ரன்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய FAAMS அணியினர் 4.3 ஓவர்களில் 36 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக கார்திக் 11 ரன்களை அடித்தார்.
அடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. முஹ்தார் வெற்றிபெற்ற "FAAMS" அணியினருக்கு ரூ.5000 ரொக்கப்பரிசையும், வெற்றிக்கு முனைந்த HK Thunders அணியினருக்கு ரூ.3000 ரொக்கப்பரிசையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.
போட்டிகளை சிறப்பாக நடத்திடமுடித்திட உதவிய எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றிகளை செலுத்துகிறோம். அடுத்ததாக, போட்டிகளை நடத்த மைதானம்தந்துதவிய காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) நிர்வாகிகளுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய அனைத்து வீரர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|