வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடத்தப்பட்ட – 13 வயதுக்குட்பட்டோருக்கான – ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் நடத்தும் 13 வயதுக்குற்பட்டோருக்கான ஹாஜி V.M.S. லெப்பை நினைவு கால்பந்து போட்டி 2017: L.K. அணி சாம்பியன் பட்டத்தை வென்றது! "FAAMS" நிறுவன அணுசரனையில் வெற்றிபெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!
இன்று (12/11) காலை 6:00 மணி முதல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் 13 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற ஹாஜி V.M.S. லெப்பை நினைவு ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் V-United "A", V-United "B", Mohideen, LK 8C, LK 7D மற்றும் LK 7C ஆகிய அணிகள் பங்கேற்றன. LK 8C, LK 7D மற்றும் V-United "A" ஆகிய அணிகள் ஒருபிரிவாகவும், LK 7C, Mohideen மற்றும் V-United "B" ஆகிய அணிகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, லீக்முறையில் முதல்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் போட்டியில் LK 8C அணியும், LK 7D அணியும் விளையாடின. இப்போட்டியில் LK 8C அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் V-United "B" அணியும், LK 7C அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United "B" அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
மூன்றாவது போட்டியில் V-United "A" அணியும், LK 8C அணியும் விளையாடின. இப்போட்டியில் LK 8C அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
நான்காவது போட்டியில் LK 7C அணியும், Mohideen அணியும் விளையாடின. இப்போட்டி இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் சமநிலையில் முடிவுற்றது.
ஐந்தாவது போட்டியில் V-United "A" அணியும், LK 7D அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United "A" அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆறாவது போட்டியில் Mohideen அணியும், V-United "B" அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United "B" அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
லீக்போட்டிகளின் முடிவில் LK 8C, V-United "A", V-United "B" ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன. சமபுள்ளிகளைபெற்றிருந்த LK 7C மற்றும் Mohideen அணிகளுக்கு மேலும் ஒரு நாக்கவுட் போட்டி நடத்தப்பட்டது. இதில் போட்டி நேரம் முழுவதும் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் LK 7C அணியினர்கள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் V-United "A" அணியும், V-United "B" அணியும் விளையாடின. இப்போட்டியில் V-United "B" அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் LK 8C அணியும், LK 7C அணியும் விளையாடின. இப்போட்டியில் LK 8C அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.
பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் LK 8C அணியினரும், V-United "B" அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் LK 8C அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இறுதியாக வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்குமுனைந்த அணிகளுக்கான காயல்பட்டினம் "FAAMS" நிறுவனத்தினர் வழங்கும் பரிசுகளை சகோ. சேக் அப்துல்காதர் மற்றும் சகோ. L.T.S. சித்தீக் ஆகியோர் வழங்கினார்கள்.
போட்டிகளை சிறப்பாக நடத்திடமுடித்திட உதவிய எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றிகளை செலுத்துகிறோம். அடுத்ததாக, போட்டிகளை நடத்த மைதானம்தந்துதவிய ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) நிர்வாகிகளுக்கும், பரிசுகளுக்கான அணுசரனை வழங்கிய காயல்பட்டினம் "FAAMS" நிர்வாகத்தினர்களுக்கும், போட்டிகளை திறம்பட நடத்திய V-United Academy பயிற்றுனர்கள் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்கள் சகோ. B.A. இஸ்மாயில் மற்றும் சகோ. ரப்பானி ஆகியோர்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய அனைத்து வீரர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|