கேபிள் டீவி தொடர்பான முறைகேடுகளைக் களைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, காயல்பட்டினத்தில் அரசு கேபிள் முகாமை விரைந்து நடத்திடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் பல ஆயிரம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. அரசு கேபிள் நிறுவனம் மூலம், இணைப்புகளை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் பலர், பல ஆண்டுகளாக - அரசு நிர்ணயித்த தொகையான 70 ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்துவருகிறார்கள். இது சம்பந்தமாக பல முறை புகார்கள் தெரிவிக்கப்பட்டும், கேபிள் டிவி தாசில்தார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது - தமிழக அரசு, டிஜிட்டல் சேவை துவக்கி, பொது மக்களுக்கு இலவசமாக - SET TOP BOX வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது.
காயல்பட்டினம் கேபிள் நிறுவனங்கள் பல, விதிமுறைகளுக்கு மாறாக - பொது மக்களுக்கு தவறான தகவல் கூறி, கடந்த ஆண்டு இறுதியிலேயே, பலரை - பல ஆயிரம் கொடுத்து, தனியார் (AMN) கேபிள் நிறுவனத்தின் SET TOP BOX வாங்க நிர்பந்தம் செய்தார்கள். தமிழக அரசுக்கு - டிஜிட்டல் உரிமம் கிடைக்காது என்ற தவறான பிரச்சாரமும் செய்யப்பட்டது.
தற்போது தமிழக அரசுக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்துள்ள நிலையில், அரசின் SET TOP BOX தரமாக இருக்காது என்ற பிரச்சாரமும் ஒரு சில ஆபரேட்டர்களால் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் - பொது மக்களின் இணைப்புகளை துண்டித்து, தனியாரின் SET TOP BOX வாங்கிட வேண்டும் என சில கேபிள் ஆபரேட்டர்கள் தற்போது பொது மக்களை கட்டாயப்படுத்திவருகிறார்கள்.
இது சம்பந்தமாக இரண்டு மனுக்கள் மூலமாக, கேபிள் டிவி தாசில்தார்/அரசு ஏற்பாட்டில் நகரில் - விழிப்புணர்வு முகாம் நடத்திட கோரப்பட்டது.
அக்டோபர் 9 அன்று மனு கொடுக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் அவர்கள் - விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என உறுதியளித்தார்கள். ஆனால் இன்று வரை, இது சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நகரில் நடத்தப்படவில்லை.
எனவே - காயல்பட்டினத்தில், உடனடியாக, தமிழ் அரசு இலவச SET TOP BOX கேபிள் டிவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்திட கோரி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 13, 2017; 6:45 pm]
[#NEPR/2017111302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |