தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம், இம்மாதம் 18ஆம் நாள் சனிக்கிழமையன்று 09.00 மணி முதல் 16.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பொது மருத்துவம், இரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை & குடல் நோய், பால்வினை நோய், இதயம், தோல், காது – மூக்கு – தொண்டை, கண் நோய்கள், இரண சிகிச்சை, மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட அனைத்து வகை நோய்களுக்கும் இம்முகாமில் பரிசோதனை செய்து ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்படவுள்ளது.
பின்வரும் பரிசோதனைகள் இம்முகாமில் இலவசமாக செய்யப்படவுள்ளது:-
இரத்தத்தில் - இரும்புச் சத்து, கொழுப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றின் அளவு... (12.00 மணிக்குள் வர வேண்டும்.)
இரத்த அழுத்தம், சிறுநீரில் உப்பு & சர்க்கரை அளவு...
மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி...
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் கண்டறிதல்...
அல்ட்ரா சோனோக்ராம் (ஸ்கேன்)...
கண்புரை பரிசோதனை... (கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அன்றே அழைத்துச் செல்லப்படுவர்!)
எஸ்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை & பரிசோதனை...
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுடையோருக்கு அறுவை சிகிச்சைக்கான பரிந்துரை வழங்கத் தேவையான பரிசோதனைகள்...
கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குத் தடுப்பூசி...
நிலவேம்புக் கசாயம்...
தொற்றா நோய் சிகிச்சை சிறப்புப் பரிசோதனை...
புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல்...
மேற்படி முகாம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் இசைவுடன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் வழிகாட்டலில், காயாமொழி – அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலரின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.பொன்வேல் ராஜ்
(சுகாதார ஆய்வாளர், காயல்பட்டினம் நகராட்சி.)
|