நவம்பர் 26 - இந்திய அரசியல் சாசன நாள் (CONSTITUTION DAY) ஆகும். இதனை முன்னிட்டு, தகவல் அறியும் உரிமை சட்டம் (Right To Information act – RTI) குறித்த – பயிற்சியாளர் பயிற்சி முகாம் (TRAINING OF TRAINERS – TOT) முகாம் அந்நாளில் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நடத்தப்படவுள்ளது. இதில் விருப்பமுள்ளோர் முன்பதிவு செய்ய அழைப்பு விடுத்து அக்குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தினை (RIGHT TO INFORMATION ACT), 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு - நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த சட்டம் மூலம் - அரசு, அரசு சார்ந்த மற்றும் அரசு உதவி பெறும் துறைகளிடம் இருந்து - அவர்கள் வசம் உள்ள, பல்வேறு வகையான, பல்வேறு வடிவில் உள்ள தகவல்களை (INFORMATION) - நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கோரலாம்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமலுக்கு வந்த சட்டங்களில், மிகவும் முக்கியமான சட்டமாக கருதப்படும் இச்சட்டத்தை, எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு பயிற்சி முகாம்களை - நடப்பது என்ன? குழுமம், காயல்பட்டினத்தில் நடத்தவுள்ளது.
முதல் பயிற்சி வகுப்பு - இறைவன் நாடினால் - நவம்பர் 26 (அரசியல் சாசனம் தினம்; CONSTITUTION DAY) அன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய நிர்வாக அலுவலகத்தில், காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 வரை - நடத்தப்படும்.
இடம்:
நிர்வாக அலுவலகம்,
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா),
முதல் மாடி, துஃபைல் வணிக வளாகம், ஹாஜியப்பா பள்ளி எதிரில்
நவம்பர் 26 பயிற்சி முகாம் - TRAINING OF TRAINERS (TOT) - என்ற முறையில் நடத்தப்படவுள்ளது. எனவே - இந்த முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்வோர், நகரின் பல்வேறு பகுதிகளில், நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாம்கள், நடத்த முன் வரவேண்டும்.
20 வயது நிரம்பிய ஆண்கள் மட்டும், 20 நபர்கள் வரை இம்முகாமிற்கு பதிவு செய்யலாம்.
இந்த பயிற்சி முகாமில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்காணும் இணைப்பு மூலமாக முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://goo.gl/jsDHTg
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 19, 2017; 3:00 pm]
[#NEPR/2017110901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|