நிகழும் வடகிழக்குப் பருவமழையையொட்டி, காயல்பட்டினத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரேயொரு முறையே கனமழை பெய்துள்ளது. அதற்கு முன்பும், பின்பும் அவ்வப்போது வானம் மப்பும், மந்தாரமுமாக இருப்பதும், எப்போதாவது சிறிது சாரல் பெய்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வழமை போல கடும் வெயில் வாட்டியது.
எங்கே, இம்முறையும் பருவமழை பொய்த்து விடுமோ என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று அதிகாலை துவங்கி, 07.30 மணி வரை சிறுமழை மட்டும் பொழிந்திருந்தது.
இந்நிலையில், இன்று 03.00 மணியளவில் திடீரென இதமழை பெய்தது. சிற்சிறு இடைவெளிகளுடன் சுமார் 30 நிமிடங்கள் பெய்த இம்மழை காரணமாக நகரில் வழமை போல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 08.45 மணி நிலவரப்படி, நகரில் வெயில் ஒளிர்கிறது. இதமான வானிலை நிலவுகிறது.
|