நிகழும் வடகிழக்குப் பருவமழையையொட்டி, காயல்பட்டினத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரேயொரு முறையே கனமழை பெய்துள்ளது. அதற்கு முன்பும், பின்பும் அவ்வப்போது வானம் மப்பும், மந்தாரமுமாக இருப்பதும், எப்போதாவது சிறிது சாரல் பெய்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வழமை போல கடும் வெயில் வாட்டியது.
எங்கே, இம்முறையும் பருவமழை பொய்த்து விடுமோ என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை துவங்கி, 07.30 மணி வரை பெருமின்னல், இடி முழக்கத்துடன் மழை பொழியத் துவங்கியது. மீண்டும் கனமழை கொட்டப் போகிறது என்று காத்திருந்த நிலையில், சில நிமிடங்கள் சிறுமழையோடு மழை பொழிவு நின்றுபோனது.
|