காயல்பட்டினம் புறவழிச் சாலையில் மின் விளக்குகள் இல்லாமையைச் சுட்டிக்காட்டி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவிற்கு, “புறவழிச் சாலையில் எல்.இ.டி. மின் விளக்குகள் நிறுவப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் வடக்கே துவங்கி - செக் போஸ்ட் வரையிலான சாலை - காயல்பட்டினம் பை பாஸ் சாலையாகும். பிரதான மாவட்ட சாலை (MAJOR DISTRICT ROAD; MDR # 158) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த சாலை - 4.472 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த சாலையின் பல பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக, இந்த சாலையின் மத்தியில், நகராட்சியினால் நிறுவப்பட்ட குடிநீர் அளவுமணி அறைக்கு அருகே உள்ள முனுசாமி கோவில் பகுதியில் இருந்து மேற்காக - 10 கம்பங்களுக்கும் மேலாக, தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளன. இதன் காரணமாக, அடிக்கடி இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.
எனவே - இப்பகுதியில் வாழும் பொது மக்களின், நலன் - பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், இச்சாலையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணியர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டும் , தெரு விளக்குகள் நிறுவிட உத்தரவிடும்படி மாவட்ட ஆட்சியரிடம் - கடந்த அக்டோபர் 30 அன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி - தமிழக அரசால் LED LIGHT அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் - அரசாணை பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 18, 2017; 12:00 pm]
[#NEPR/2017111801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 07:40 / 22.11.2017.]
|