காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தினால் புதிய வசதிகள் செய்து தரப்படும் என, தமிழக அரசின் - மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS), “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை, நகர மக்கள் அதிகளவில் பயன்படுத்திட தூண்டும் நோக்கில், பல்வேறு முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டுவருகிறது.
இது சம்பந்தமாக, சுகாதாரத்துறையின் பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக முறையீடுகள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக -- மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக - *சமீபத்தில், இரு மருத்துவர்கள் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும் - டாக்டர் ஹேமாலதா என்பவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிப்புரிவதாக உண்மைக்கு புறம்பாக கூறப்பட்டு, ஓர் ஆண்டுக்கும் மேலாக அவ்விடம் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும், தொடர்ந்து நடப்பது என்ன? புகார் பதிவு செய்துவருகிறது.
மருத்துவமனையை தாலுகா தகுதிக்கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்திட கோரியும், மேலும் இரு நிரந்தர மருத்துவ பணியிடங்களை உருவாக்க கோரியும் நடப்பது என்ன? குழுமம் சார்பாக - வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் துறையின் இயக்குனர் (DMS) டாக்டர் எம்.ஆர். இன்பசேகரன், நடப்பது என்ன? குழுமத்திற்கு விரிவான பதிலை அனுப்பியுள்ளார்.
அதில் - தற்போது அரசு மருத்துமனையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை விபரங்களும், தற்போது வழங்கப்பட்டுவரும் சேவைகள் குறித்தும் விளக்கியுள்ள இயக்குனர், ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விட குறைவான உள்நோயாளிகளே மருத்துவமனையை பயன்படுத்தவாகவும், அதிகமான மக்கள் - அரசு மருத்துவமனையை பயன்படுத்த துவங்கினால் - புதிய வசதிகள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வசதிகள் மேம்படுத்தப்பட்டால் தான் - மக்களும் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனையை பயன்படுத்துவர் என்ற அடிப்படையில், கோரப்பட்டுள்ள அனைத்து மேம்பாடுகளையும் விரைவில் மேற்கொள்ள - தொடர்ந்து, சுகாதாரத்துறையிடம் நடப்பது என்ன? குழுமம் வலியுறுத்தும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 13, 2017; 8:30 pm]
[#NEPR/2017111304]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|