நாம் பொதுவாக எல்லாப்பதிவுகளுக்கும் கருத்து எழுதிவிடுவதில்லை சில மனதைத்தொடும் பதிவு,சுப,அசுப பதிவுகளுக்கும் கருத்து எழுவது அல்ஹம்துலில்லாஹ் வழக்கமாக இருந்துவருகிறது
சமீப காலமாக வலை தளத்தில் அமர கால அவகாசம் வேலைப்பளுவின் காரணமாக அமர முடியவில்லை.
ஆனால் உங்களுடைய இந்தப்பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன் இருந்தபோதிலும் எனது தாமதமான கருத்தை சொல்லவருவது, நமக்கு முந்திய தலைமுறையினர் இந்தியர்களாகிய நாம் அன்றைய பர்மாவாகிய இன்றைய மியான்மர் மக்களால் துன்புறுத்தப்பட்டோம், துரத்தியடிக்கப்பட்டு ,வன்முறைகளுக்குப்பலியாக்கப்பட்டோம்,
கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு,உயிர்,உடமை,மானம் இழந்து பர்மாவிலிருந்தே நடந்து குற்றுயிராய் தாய் நாடுவந்து சேர்ந்தோம் அந்த வரலாற்றுச்சுவடு மாறிவிடுவதில்லை.ஆனால் மறந்துவிட்டோம் இன்று இருப்பதுபோல் செயற்கைக்கோள்கள் உதவியுடன் ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக்காட்டி வெளிக்கொணரவில்லை.அப்படியானால் எப்படியெல்லாம் அவதிப்பட்டிருப்பார்கள் இது ஒன்றும் மியான்மார்களாகிய,பர்மியர்களுக்குப்புதிதல்ல அதுவும் நோபல் பரிசு வென்ற ஒருதலைவியின் கீழாட்சியில்தான் இந்த கொடூரங்கள் அரங்கேறியது.
நாம் போராடி நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித்தந்து வளங்கொழிக்கச்செய்து வாழ்க்கை வடிகால் அமைத்துத்தந்தும் நமக்கே பிறக்க ஒருநாடும்,பிழைக்க ஒருநாடும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டோமே
எங்கே நம்மால் சொல்லிவிடமுடியுமா உண்மையான சுதந்திரதாரியென்று அந்தரத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வெறும் பராசக்திவசனத்தை நினைவுபடுத்திப்பார்த்துக்கொண்டு மகிழ்ந்து நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்
அன்று ஒட்டுமொத்தமாக இந்தியமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம் இன்று முஸ்லீம் என்ற அடையாளம் கொண்டதால் நசுக்கப்பட்டு சீரழித்து சின்னாபின்னமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்
இதில் நான் எனக்கென்ன பாதிப்பு உனக்கென்ன பாதிப்பு அவனுக்குத்தானே பாதிப்பு என்று பிரிந்துகிடப்பதால் வரும் விளைவுகளே இந்த அவலம்.இன்று அவனாக இருந்து ஏற்பட்ட என்னிலை,நாளை நீ அவனாகி இந்நிலை ஏற்படாதென்று என்ன நிச்சயம்.
ஒற்றுமையெனும் கயிற்றைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும்,அவனுடைய தூதர்களும் சொன்னதாக உதட்டளவில் சொல்லிக்கொள்கிறோம் உள்ளத்தில் அந்தஉணர்வு உண்மையாகஇல்லை
எப்பொழுது நமக்கு முஸ்லிமுக்கு,முஸ்லீம் சகோதரர்கள் என்ற உண்மையான பந்தம் வருகிறதோ அன்றுதான் விடிவு பிறக்கும் இல்லையென்றால் பிரிவினை சக்திகளால் பிரித்தாளப்பட்டு அடிமைகளாக்கப்படுவோம்
நமது மார்க்கம்தான் உலகிற்கு அன்பையும்,பண்பையும்,மனிதத்தையும் கற்றுத்தந்து தந்தது அந்த புனிதமார்க்கத்தை புண்ணாக்கி குளிர்காய்கிறது சில தீயசக்திகள் இன்னும் சவால் விடுகிறது இஸ்லாத்தை இந்த பூமியிலிருந்தே தூக்குவேனென்று நம்ரூத்j, ஃபிர்அவ்ன்,அபூஜஹீலின் சிசுக்கள் கொக்கரிக்கிறது காரணம் சிங்கம் சுகவீனப்பட்டால் குள்ளநரியெல்லாம் காட்டுக்கு அதிபதியாகுமாம்.
நமது சிந்தனைகளை சீர்தூக்கிப்பார்த்து இனிமேலும் ரொஹிங்காவின் நிலைபோல் தொடராமலிருக்க கொடுமைகள் நம்மைத்தொடராமலிருக்க சரியாக ஏழை வரிகளைளையும் கொடைகளையும் கொடுத்து உலக அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் அந்த அந்த நிதியிலிருந்து அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் வல்ல நாயன் அதற்கான பலனைத்தர போதுமானவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross