செய்தி: சென்னையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் ஜாவியா மாணவர்கள் முதல், மூன்றாம் பரிசுகளை வென்றனர்! சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டுரையும் ஏற்புரையும் posted bymackie noohuthambi (kayalpatnam)[06 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46038
சுமார் இரண்டு மாதங்கள் உடல் நிலை சரியில்லாமல் சற்று தேறிவரும் நேரத்தில் வந்த அழைப்பினை ஏற்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்.
ஹாபிள்களை பாராட்டி உரை நிகழ்த்திய நட்சத்திர பேச்சாளர்கள் பாரூக் ஆலிம் பாதுல் அஸ்ஹப் ஆலிம் ஹாமித் பக்ரி ஆலிம் அப்துல்லாஹ் மக்கி ஆலிம் அப்துல் வதூத் ஆலிம் திருமறையை உள்ளத்தில் பதிவு செய்யும் ஹாபிள்களுக்கு அல்லாஹ் நாளை மறுமையில் கொடுக்கும் பாக்கியங்களையும் அவர்கள் பெற்றோருக்கு அளிக்கும் கண்ணியத்தையும் சொன்னபோது இதயம் இனித்தது கண்கள் பனித்தது. எனது மூன்று மக்களுமே ஹாபிழ்கள் என்பதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன் அல்லாஹ் எல்லா ஹாபிள்களையும் கபூல் செய்வானாக.ஆமீன்.
பாராட்டு விழா நடக்கும் எல்லா கூட்டங்களிலும் ஏற்புரை என்று ஒன்றிருக்கும். பாராட்டை பெற்றவர்கள் அதற்கு நன்றி கூறி பேசுவார்கள். அப்படியொரு மரபை இங்கும் ஏற்படுத்தி பட்டம் பெற்று போட்டிகளில் வெற்றி பெற்று வந்திருக்கும் திருமறை செல்வர்களில் ஒருவருக்கு அந்த பயிற்சி அளித்து ஏற்புரை வழங்க சொல்லி இருக்கலாம் அல்லது அவர்களில் ஒருவரின் காந்தக் குரலில் சில திருமறை வசனங்களை ஓத சொல்லி இருந்தால் இந்த விழா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்ற எனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
தாங்கள் செய்யும் நற்செயல்களை பாராட்ட வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் என்று பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்கள் மழலைகளும் கூட ஆசைப் படுகிறார்கள். நபிகள் நாயகம் அவர்கள் நபி தோழர்களை பாராட்டி யுள்ள செய்திகள் ஹதீது நூல்களில் நிறைந்து காண படுகிறது. நமது சமுதாயத்தில் அது குறைவாகவே இருக்கிறது. கால்பந்தாட்டம் கிரிக்கெட் போன்ற ஆட்டங்களில் பங்கு பெறுபவர்கள் மிக சிலராக இருந்தாலும் அவர்களை பாராட்ட பல்லாயிரக் கணக்கானவர்கள் அரங்கம் நிறைந்து கரகோஷம் செய்கிறார்கள். அந்த கரகோஷம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது. அப்படி இருக்க அல்லாஹ்வின் திருமறை வசனங்களை பாதுகாக்க இந்த ஹாபிள்களின் உள்ளங்களை தேர்நதெடுத்திருக்கிறானே, அப்படி பட்டவர்களை நாம் பாராட்ட கடமை பட்டிருக்கிறோம் அவர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டியது நமது கடமை
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த திருமறை செல்வர்களின் வாழ்வில் எல்லா வளமும் நல்கி, அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகத்தின் வழிமுறை இவற்றை பின்பற்றி நடந்து இம்மையிலும் மறுமையிலும் சிறப்பான வாழ்வை கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross