செய்தி: பொதுமக்களின் உணர்வுகளையும், நகரின் பாரம்பரியத்தையும் கருத்திற்கொண்டு காவல் சாவடியை அகற்றிடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இனி காயல் பேர் மெல்ல சாகும் posted bymackie noohuthambi (kayalpatnam )[17 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46070
இனி தமிழ் மெல்ல சாகும் என்று ஒரு கவிஞன் பாடினான். தமிழர்கள் தமிழ் மொழியை உதாசீனம் செய்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதாலேயே அவன் அப்படி பாடினான்.
காயல்பட்டினத்துக்கு இருந்த நல்ல பெயர் பற்றி ஆசிரியர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதே நேரம் காயல்பட்டினம் எல்லையில் நடந்து வரும் குற்றச்செயல்கள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லி உள்ள செய்திகளை உற்று நோக்கினால் காயல்பட்டினம் இப்படி சீர்கெட்டு இருப்பதை யாரும் கனத்த உள்ளத்தோடுதான் பார்ப்பார்கள்.
காவல் துறை மக்களின் நண்பன் என்ற கதை எல்லாம் வெறும் பித்தலாட்டம். 1992 அல்லது 1993 இல் நடைபெற்ற மீன் கடை போராட்டத்தில் காவல் துறை எப்படி நடந்து கொண்டது என்பது என்போன்ற செவி புலன் இழந்தவர்களுக்கு நன்கு புரியும். இப்போதும் கூட சில தினங்களுக்கு முன் நடந்த ஸ்கூட்டர் உதைத்து ஒரு பெண் உயிரிழந்த மிருகத்தனமான தாக்குதல் காவல் துறையின்மனித நேயத்தை நன்கு படம்பிடித்து காட்டுகிறது.
காவல் துறை குற்றங்களை கண்காணிக்க நவீன வசதிகள் நிறையவே உள்ள இந்த கால கட்டத்தில் நமதூரில் ஒரு மினி காவல் நிலையம் அமைத்திருப்பது நம்மை பாதுகாக்கவா அல்லது நம்மை பலிகிடாவாக்கவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடலிலும் தரையிலும் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் எல்லாம் உங்கள் கைகள் தேடிக் கொண்டவையே என்று ஒரு திருமறை வசனம் கூறுகிறது.
நமதூர் மக்கள் அல்லது நமதூரில் குடியேறி விட்ட சமூக விரோதிகள் செய்து வரும் சட்டத்துக்கு புறம்பான செயகைகளை கட்டுப் படுத்த இந்த காவல் நிலையம் பயன்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சி மத்தியில் கோலோச்சிக் கொண்டிருப்பதாலும் அந்த ஆட்சிக்கு தமிழக அரசு சாமரம் வீசிக் கொண்டிருப்பதாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த காவல் நிலையம் முயற்சிகள் மேற்கொள்ளுமா என்ற சந்தேகமும் உள்ளது.
எனவே, மக்கள் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை முன்னெடுத்து நடத்தி எல்லா ஜமாத்தார்களும் கையெழுத்திட்டு அரசுக்கு நமது ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டியுள்ளது. முஸ்லீம் ஐக்கிய பேரவையும் மற்றும் பெரியவர்களும் ஊர் நலனில் அக்கறையுள்ள நடப்பதென்ன குழுமமும் காயல்நகர்மன்ற குழுமமும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் இந்த மினி காவல் நிலையத்தை இங்கிருந்து வாபஸ் செய்ய ஆவண செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
இந்த நிலை தொடர்ந்தால் நமதூருக்கு எதிரான எல்லா திணிப்புக்களும் நம்மை அறியாமல் வந்து சேரும் என்பதை பணிவுடன் இங்கு பதிவு செய்கிறேன்.
அல்லாஹ் எல்லா சதிகளை விட்டும் நம்மையும் நம் ஊரின் கௌரவத்தையும் பாது காப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross