Re:...பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[19 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46075
தம்பி ஷாபி எத்தனையாவது இடத்தை பிடித்தார் என்பது அல்ல இங்கு முக்கியம் தொடர்ந்து பல அணிகளில் விளையாடி காயல் நகரின் தலை சிறந்த வீரராக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. மாணிக்க வியாபாரி மகன் மாணிக்க வியாபாரியாகத்தான் இருக்க வேண்டும் மர வியாபாரம் செய்ப்பவரின் மகன் மரம் வியாபாரம்தான் செய்யவேண்டும் என்ற தவறான எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் தம்பி ஷாபி.
கடந்த 3ம் திகதி LK பள்ளி ஆண்டுவிழாவில் மருத்துவர் அபூபக்கர் அவர்கள் கூறிய கருத்து இங்கே நினைவு கூரத்தக்கது. ஒரு மாணவனுக்கு கால்பந்தாட்டத்தில் முன்னிலை வகிப்பதற்கான பரிசு வழங்கப்பட்டபோது அவர் சொன்னார் மாணவர்கள் எந்த துறையில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பெற்றோர் அறிந்து கொண்டு அவரை அந்த துறையில் ஊக்குவிக்க வேண்டும் .நீ மற்றவர்களை போல் மருத்துவராக வேண்டும் பொறியாளராக ஆக வேண்டும் என்று உங்கள் மக்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் உங்கள் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறான். அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அந்த துறையில் அவனை ஊக்குவியுங்கள் என்ற நிதர்சன உண்மையை தம்பி ஷாபி நமக்கு நினைவூட்டி இருக்கிறார்.
அவர் மேலும் இந்த துறையில் வெற்றிகள் பல குவித்து இந்திய அளவில் வெற்றி பெற்று உலக நாடுகளுக்கும் சென்று தங்க கோப்பையை தட்டி சென்று நமதூருக்கும் இந்த நாட்டுக்கும் பெருமை தேடி தர வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
பாராட்டுக்களுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் ஏங்கி நிற்கும் இளைஞர்கள் நமதூரில் சாதனையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இலை மறை காய் போல் இருக்கும் அவர்களை இனம் கண்டு கொண்டு பாராட்டு விழாக்கள் நடத்த நமதூரில் உள்ள ஐக்கிய விளையாட்டு சங்கம் காயல் ஸ்போர்ட்டிங் கிளப் போன்றவை முன் வரவேண்டும் என்பதை இங்கு பணிவுடன் பதிவு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross